a

ஊரடங்கு அச்சத்தால் புலம்பெயரும் வடமாநில தொழிலாளர்கள்


தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், முழு ஊரடங்கு எப்போது வேண்டுமானாலும் பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர்.

இதன் எதிரொலியாக சென்னை, கோவை, திருப்பூர் என பல்வேறு இடங்களிலும் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

Also Read  கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரே ஒருநாள் மட்டும் ரயில் சேவை நிறுத்தப்படும் என ரயில்வே அறிவித்தது.

மக்கள் சுய கட்டுப்பாடுடன் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். ஆனால், அந்த குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு, நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தம் தொடரும் என அதிரடியாக மத்திய அரசு அறிவித்தது.

இதனால், வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்திருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

Also Read  டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களும் மூடப்பட்டதால், அவர்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்தனர்.

ஒரு சிலர் கால்நடையாகவே பல நாட்கள் நடந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு சென்றனர். இந்த விவகாரம் அப்போது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read  கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

இந்த நிலையில் தான் நடப்பாண்டில் உஷாராக இருக்க வேண்டும் என்பதை அறிந்துள்ள வெளிமாநில தொழிலாளர்கள், முழு ஊரடங்கு பிறப்பிக்கலாம் என அச்சமடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக ஏப்ரல் 19ம் தேதி முதலே ரயில் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே திருமண சடங்கு! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!

Lekha Shree

கொரோனோ நோயாளிகளின் குடும்பத்திற்கு இலவச இளநீர்! – இளைஞரின் அசத்தல் முயற்சி

Shanmugapriya

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற இருவர்!

Shanmugapriya

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

Lekha Shree

மனிதர்களிடமிருந்து முதல் முறையாக பூனையை தாக்கிய கொரோனா….

VIGNESH PERUMAL

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

Lekha Shree

“எனது மேக்கப் அழிந்துவிடும்” – திருமணத்தன்று மாஸ்க் அணியாமல் அலட்சியம் காட்டிய மணமகளுக்கு அபராதம்!

Shanmugapriya

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree