a

18+ அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது…! தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள்…!


கொரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமெடுத்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்பொருட்டு கடந்த 2 நாட்களில் 2 கோடி 30 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்கே தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த மாநிலங்களின் நிலைப்பாடு இதோ…

Also Read  கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ...

1.தடுப்பூசிக்கு ஆர்டர் அளித்தாலும், மே இறுதி அல்லது ஜூனில்தான் தடுப்பூசி தருவோம் என தடுப்பூசி நிறுவனங்கள் கூறுகின்றன என்றும் இந்த ஒருமாத இடைவெளி ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, 45 வயது மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இரண்டாது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியது நிலுவையில் இருக்கையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளது. தங்களிடம் மூன்று முதல் நான்கு லட்சம் தடுப்பூசிகள்தான் இருக்கிறது என்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

2.நாளைக்குள் தடுப்பூசிகளைத் தர முடியாது என இரண்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களும் தெரிவிப்பதால், 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்பில்லை என மத்தியப் பிரதேச முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Also Read  50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலியுடன் பேசிய 82 வயது முதியவர்! - இது ஒரு நிகழ்ச்சி கதை!

3.ஒரு கோடி தடுப்பூசி ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், நாளைக்குள் தடுப்பூசியை தர சீரம் நிறுவனம் தயாராக இல்லை என்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எண்ணத்தில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்

4.தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே என சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவை எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல் கிடைக்கப் பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Also Read  "கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்" - நிதி ஆயோக்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏறுமுகத்தில் கொரோனா – வார இறுதியில் ஊரடங்கு..!

Lekha Shree

காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்

Tamil Mint

உத்தரகாண்ட் நிவாரணப் பணிக்கு ஊதியத்தை வழங்கிய ரிஷப் பந்த்!

Tamil Mint

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்: பிரதமர் மோடி

Tamil Mint

ஷூ-வுக்கு பாலீஷ் போடச் சொல்லி டார்ச்சர்… அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு பேம்லி டூர்… செலவின பார்வையாளர் மீது அடுக்கடுக்கான புகார்…!

Devaraj

“மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது; எப்போதும் வளையாது” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Tamil Mint

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree