a

நாமக்கல் மாவட்டத்தில் நோட்டாவிடம் தோற்ற 116 வேட்பாளர்கள்…!


தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 9,367 பேர் யாருக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்று நோட்டாவுக்கு வாக்களித்தது தெரியவந்ததுள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க. கொ.ம.தே.க., அ.ம.மு.க., ம.நீ.ம., நா.த.க., சுயேச்சைகள் என 140 பேர் போட்டியிட்டனர். இவர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பம் இல்லை என சுமார் 10 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

Also Read  சனிக்கிழமையும் ஆபீஸ்க்கு வாங்க: அதிகாரிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு

அதன்படி நாமக்கல் தொகுதியில் 1,285 வாக்குகளும், ராசிபுரம் தொகுதியில் 2,110 வாக்குகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 2,058 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. திருச்செங்கோடு தொகுதியில் 1,618 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 954 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 1,342 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

நாமக்கல் தொகுதியில் 26 வேட்பாளர்களில் 4 பேரும், ராசிபுரம் தொகுதியில் 15 வேட்பாளர்களில் 3 பேரும், சேந்தமங்கலம் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் 4 பேரும் நோட்டாவை விட அதிக வாக்குகளை பெற்றனர்.

Also Read  மீண்டும் சட்டமன்றத்துக்குள் அடி வைக்குமா கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகள்…!

திருச்செங்கோடு தொகுதியில் 4 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 5 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 4 பேரும் நோட்டாவைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். இவர்களை தவிர மற்ற அனைவரையும் நோட்டா முந்தி உள்ளது. மொத்தம் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

சென்னையில் ஒரு பெய்ரூட்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

Shanmugapriya

சென்னையில் 41% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்!

Tamil Mint

தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரின் மனைவி திருச்சியில் கைது

Tamil Mint

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்கள் கண்டனத்துக்கு உரியது: பிரதமர் மோடி

Tamil Mint