ஆஸ்திரேலியா ஓபன்: ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2-வது முறையாக ரத்து செய்தது.!


செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2-வது முறையாக ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்தது.

Also Read  ஐபிஎல் 2022: அகமதாபாத் மற்றும் லக்னோ புதிய அணிகளாக அறிவிப்பு!

இந்நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Also Read  ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க சென்ற ஜோக்கோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.

Also Read  "ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்" - ஜப்பானிய மக்கள் போராட்டம்!

இதனால் நோவா ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2-வது முறையாக ரத்து செய்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா..!

Lekha Shree

முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற திருநங்கை…!

Lekha Shree

இந்த 2 மாற்றங்கள் செய்தால் இந்திய அணி வெற்றி பெறும் : கவாஸ்கர் கருத்து

suma lekha

பந்தில் எச்சில் தடவிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸ் – எச்சரித்த நடுவர்கள்!

Lekha Shree

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

உலக கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் கருத்து

suma lekha

டோக்கியோ ஒலிம்பிக்: குத்து சண்டை காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வி

suma lekha

மல்யுத்தம்: இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி…!

Lekha Shree

10 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!!

Tamil Mint

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறும் ஆஸ்திரேலியா… இறுதி டெஸ்ட் போட்டி அப்டேட் இதோ!

Tamil Mint