a

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?


Truecaller நிறுவனம், இந்தியாவில் கோவிட் மருத்துவமனை அடைவு சேவையை (Covid Hospital Directory Service) அறிமுகப்படுத்தியுள்ளது.. அதன் உதவியுடன், பயனர்கள் தங்களுக்கு அருகிலுள்ள கோவிட் -19 மருத்துவமனை மற்றும் சுகாதார மையத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

Android பயனர்களுக்காக Truecaller இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள கோவிட் -19 மருத்துவமனைகளின் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் காணப்படுகின்றன.

Also Read  கொரோனாவின் கோரத்தாண்டவம் - இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, Truecaller நிறுவனம் கோவிட் மருத்துவமனை டைரக்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய பயனர்கள் இந்த சேவை கோவிட் மருத்துவமனையின் தொலைபேசி எண் மற்றும் முகவரி பற்றிய தகவல்களைப் பெறுவார்கள்.

இந்த சேவையைப் பயன்படுத்த, நீங்கள் எந்த தனி செயலியையும் பதிவிறக்க தேவையில்லை. Truecaller பயன்பாட்டின் மெனுவுக்குச் சென்று பயனர்கள் நேரடியாக தகவல்களைப் பெறலாம்.

Also Read  உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் சாவகாசமாக படுத்துக்கிடந்த தெருநாய்... வைரல் ஆகி வரும் காணொளி! முழுவிவரம் இதோ.!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள கோவிட் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை வழங்கியுள்ளதாகவும், அதை அரசாங்க தரவுத்தளத்தில் இருந்து எடுத்துள்ளதாகவும் Truecaller நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தகவல்களை தினமும் புதுப்பித்து, பல மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கிடைப்பதை உறுதி செய்வதாக Truecaller இந்தியா தெரிவித்துள்ளது.

Also Read  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் - மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

இந்த சேவையைப் பயன்படுத்த, பயனர்கள் தங்கள் ட்ரூகாலர் பயன்பாட்டை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து புதுப்பிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

8 போலீஸ்காரர்களை கொன்ற தாதா என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Tamil Mint

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

கொரோனாவால் தந்தையை இழந்து வாடும் இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

ஒரே பகுதியை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அடைப்பு!

Jaya Thilagan

கொரோனோ நோயாளிகளின் குடும்பத்திற்கு இலவச இளநீர்! – இளைஞரின் அசத்தல் முயற்சி

Shanmugapriya

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பால் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு!

Lekha Shree

70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் டார்க் வெப்பில் அம்பலம்.!

Tamil Mint

வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை – கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

Bhuvaneshwari Velmurugan

PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?

Devaraj

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint