a

ஊசியை அகற்ற குழந்தையின் விரலை வெட்டிய கொடூரம்..!


தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்ற அரசு மருத்துவமனை செவிலியர் அக்குழந்தையின் விரலை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரை அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன்-பிரியதர்ஷினி தம்பதிகள். பிரியதர்ஷினிக்கு 9வது மாதத்திலேயே வலி எடுத்ததால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், அவருக்கு பெண் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு எந்தவித பிரச்னையும் நோய் தோற்றும் இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Also Read  வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

ஆனால், அந்த குழந்தைக்கு உணவு கொடுக்கக்கூடிய பகுதிகளில் சில பிரச்சனைகள் இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஊசி மூலம் உணவு வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்பின்னர் டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்தில் அந்த ஊசியை சுற்றியுள்ள பேண்டேஜை கையால் பிரிக்காமல் கத்திரிக்கோலை உபயோகித்துள்ளார் செவிலியர்.

Also Read  இன்று சிவப்பு கோள் தினம்

இந்த அலட்சிய போக்கினால் அக்குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கபட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறிப்போக மருத்துவர்கள் வந்தவுடன் இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் என கூறுவார்கள் என அலட்சியமாக பத்தி கூறியுள்ளார் அந்த செவிலியர்.

இதனால் அந்த செவிலியர் மீதும் நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read  உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுக்கடைகளை உடனே மூடுங்கள்: ராமதாஸ்

Lekha Shree

லண்டனில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலுக்கு ஒப்படைப்பு

Tamil Mint

ஸ்டாலின் பதவியேற்பு விழா – யார் யாரெல்லாம் பங்கேற்பு – முழு விவரம் இதோ…!

sathya suganthi

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

Tamil Mint

குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Lekha Shree

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சகாயம் ஐஏஎஸ்

Tamil Mint

கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை….

Devaraj

திரையரங்குகளில் இன்று முதல் மீண்டும் திறப்பு

Tamil Mint

தரமணி பகுதியில் வழிப்பறி: 8 நபர்கள் கைது!!

Tamil Mint

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

Lekha Shree

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை? மாணவர்களிடையே அதிகரிக்கும் நோய் பாதிப்பு…!

Devaraj

கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிப்பு

Tamil Mint