a

“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…?


கொரோனா இரண்டாவது அலை பரவல் தொடர்பாக வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் 2 தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனாவுக்கு எதிராக பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் இது நிறைய பேரை நம்மிடம் இருந்து பறித்துவிட்டது என்றும் கண்கலங்கிய படி பிரதமர் மோடி பேசினார்.

Also Read  கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி…? வழிமுறை இதோ…!

மருத்துவர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போது பிரதமர் மோடி கண்ணீர் விட்ட நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

மேலும், பிரபல அமெரிக்க செய்தி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’முன்பக்கத்தில் இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார் என்று எழுதப்பட்டு அதற்கு கீழே முதலை ஒன்றின் புகைப்படம் இருப்பது போன்ற போஸ்ட் சமூக வலைதளத்தில் வைரலானது.

Also Read  பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா! 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்!

இந்திய பிரதமர் மோடி முதலைக்கண்ணீர் விடுகிறார் என விமர்சிக்கும் வகையிலான இந்த புகைப்படத்தை காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங், பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட வைரலானது.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக முதலைக்கண்ணீர் விடுவது போன்று வெளியான புகைப்படம் போலி என்று தெரியவந்துள்ளது.

Also Read  கொரோனா தடுப்பு - மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்...!

இந்த புகைப்படம் வெளியானதாக கூறப்படும் கடந்த 21 ஆம் தேதியன்று சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான புகைப்படத்துடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்ததும் அந்த புகைப்படத்திற்கு பதிலாக எடிட் செய்து முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடி அழுகிறார் என்று முதலையின் புகைப்படம் போலியாக வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்

Shanmugapriya

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

Tamil Mint

பெட்ரோல் விலை 22 நாட்களாக மாறாத மாயம் என்ன?

Devaraj

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.34 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் அறிவிப்பு

Tamil Mint

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

ஜனவரி 1-ம் தேதி முதல் ‘ஃபாஸ்டாக்’ கட்டாயம்: மத்திய அரசு

Tamil Mint