a

பிச்சை எடுத்து லட்சக்கணக்கில் பணம் சேர்த்த மூதாட்டி – மோடி, கருணாநிதியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்…!


ஜம்மு – காஷ்மீரில் பிச்சை எடுத்து வந்த மூதாட்டியின் குடிசையில் 2.60 லட்சம் ரூபாய் சில்லரைகளாக மூட்டைகளில் அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவ்ஷேரா மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி, 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து பிழைத்து வந்துள்ளார்.

இவருக்கு சமீபத்தில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து குடிசையிலேயே முடங்கி கிடந்தார்.

இதை அறிந்த ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர் இல்ல ஊழியர்கள், சமீபத்தில் காப்பகத்துக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து, மூதாட்டியின் குடிசையில் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, வீட்டில் மூட்டை மூட்டையாக சில்லரைகள் கண்டெடுக்கப்பட்டன. 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள், காகித கவர்களின் வைக்கப்பட்டு இருந்தன.

சில்லரை இருந்த மூட்டை ஒன்று 80 கிலோ எடை இருந்ததாக மாநகராட்சி ஊழியர் தெரிவித்தார்.

Also Read  டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் நிலவுகிறது


அந்த பணத்தை எண்ணியதில் 2.60 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.

பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடக்கிறது. இந்த பணம் அத்தனையும் 30 ஆண்டுகளாக, மூதாட்டி பிச்சை எடுத்து சம்பாதித்தது என்றும் சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபடவில்லை என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  "50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

பிரதமர் மோடி, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது வாரிசுகளிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது அதை ஏன் மக்கள் கண்டுக்கொள்வதில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா – அமெரிக்க பாராட்டு !!!

Tamil Mint

2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

Tamil Mint

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

Tamil Mint

உ.பி.யில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – புகார் அளித்த தந்தை விபத்தில் மரணம்

Devaraj

மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு

Tamil Mint

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த சச்சின்!

Shanmugapriya

12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு…!

sathya suganthi

மோடியின் தலைமையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்- அமித்ஷா

Shanmugapriya