a

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?


கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் வசிக்கும் ஒரு முதியவர் கடந்த 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வருவது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கேரளா மாநில கொல்லம் அருகே கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் எகியா. இவர் அப்பகுதியில் சாலையோற கையேந்தி பவன் உணவகம் நடத்தி வருகிறார்.

18 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கையேந்திப் அவனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தேனீர் அருந்த வந்திருக்கிறார்.

அப்போது எகியா வேட்டியை மடித்துக் கட்டியிருந்ததால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அவரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார்.

Also Read  சிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி! - அதிர்ச்சி அடைந்த பெண்

வேட்டிய மடிச்சு கட்டுனது ஒரு குத்தமா என மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார் எகியா.பின்னர் வேட்டி கட்டினால் தானே குத்தமாக தெரிகிறது என வேட்டி சட்டையை கழட்டிவிட்டு அன்றிலிருந்து நைட்டி அணிந்து கொண்டு கடந்த 18 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக அவரை அப்பகுதியினர் ‘மேக்ஸி மாமா’ என அழைத்து வருகின்றனர். துபாயில் பணிபுரிந்த எகியா எந்தவித சம்பாதியமும் இன்றி ஊருக்கு திரும்பினார். பின்னர் சாலையோர கையேந்தி பவன் உணவகத்தைத் தொடங்கினார்.

Also Read  மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில்

அங்கு தேநீர், மதிய சாப்பாடு போன்றவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்று வருகிறார். மேலும் 10 பரோட்டாக்கள் வாங்கினால் 5 தோசைகள் இலவசம் இப்படி பல ஆஃபர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார் எகியா.

இப்படி பல ஆஃபர்களை வழங்குபவர் சாப்பாடை மீதி வைத்தால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்திருக்கிறார். இதுதான் இந்த கடையின் ஹைலைட்டாக திகழ்கிறது.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எகியா தன்னிடமிருந்த 23 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வாங்கி சென்றார். இரண்டு நாட்கள் வரிசையில் காத்திருந்தும் பணத்தை மாற்ற முடியாமல் போக ஆத்திரமடைந்த அவர் போராட்டம் நடத்தியதுடன் மீசையை மழித்து தலையில் பாதி முடியை வழித்து மொட்டை அடித்துக்கொண்டார்.

இவ்வாறு போலீஸ் தாக்கியதற்காக கடந்த 18 வருடங்களாக நைட்டியுடன் வலம் வரும் முதியவர் குறித்தான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

Tamil Mint

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்த தந்தை; 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Tamil Mint

பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Tamil Mint

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பேப்பர் பாட்டில்களை பயன்படுத்த முடியுமா? – சோதனையில் கோகோ கோலா நிறுவனம்

Shanmugapriya

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

ஆமை நடனமாடி பார்த்திருக்கிறீர்களா?- இணையத்தில் வைரலாகும் புதிய வீடியோ!

Shanmugapriya

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!

Devaraj

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint

தோசை சுட்ட ‘தளபதி’ விஜய் – வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

Lekha Shree

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj