தமிழகத்தில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல் – கூடுதல் கட்டுப்பாடுகள்?


ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 04) ஆலோசனை நடத்தவுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஓமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருவதுடன், அது தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிக்கும் என்பதும் மிரட்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Also Read  புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்
Coronavirus

இந்தியாவில் 1,800க்கும் மேற்பட்டோர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் அதிக அளவாக 578 பேர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகின்றன. ஓமைக்ரான் 3வது அலை பரவலுக்கு வித்திட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதோடு புதிதாக உருவாகியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனாவும் வேகமாக பரவி வருகிறது.

Also Read  தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்ட போகும் லாக் டவுன்

தற்போது வரை தமிழகத்தில் 121 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 04) காலை 11 மணி அளவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை - ரயில்வே நிர்வாகம் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

தைப்பூச திருநாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு! குவியும் பக்தர்கள் கூட்டம்!

Tamil Mint

நூதன முறையில் நகை திருட்டு…! வசமாக சிக்கிய திருடர்கள்! எப்படி தெரியுமா?

Tamil Mint

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

Tamil Mint

வேளாண்துறையை அமைச்சர் கே. பி. அன்பழகனியிடம் கூடுதலாக ஒப்படைப்பு

Tamil Mint

டெஸ்லாவின் ‘ஆட்டோ பைலட்’ உற்பத்திக்கு தலைமை ஏற்கும் தமிழர் அசோக் எல்லுசுவாமி…!

Lekha Shree

வேலுமணியை அச்சுறுத்தலாம் என்னை அச்சுறுத்த முடியாது: நெட்டிசன் அட்டகாசத்தால் அலறிய மாஃபா பாண்டியராஜன்.!

mani maran

‘பெகாசஸ்’ விவகாரம்: தமிழில் முழக்கமிட்ட பஞ்சாப் எம்.பி… அதிர்ந்த நாடாளுமன்றம்..!

Lekha Shree

திமுகவின் மூத்த தலைவர் மறைந்தார்

Tamil Mint

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்

Tamil Mint

மாணவர்களே தயாராகுங்கள்: பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

11 ஆம் வகுப்பிற்கு மறைமுக நுழைவுத் தேர்வு…! பரிசீலனை செய்ய வலுக்கும் கோரிக்கை…!

sathya suganthi