ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார அமைப்பு


தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் 12 நாடுகளுக்கு பரவியிருந்த நிலையில், தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

Also Read  கொரோனா அப்டேட் - இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முதல்முறையாக தென்னாபிரிக்கா பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு மிதமான பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இந்த ஒமைக்ரான் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால், உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் பரிசோதனையை முடுக்கிவிட்டுள்ளன.

Also Read  ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

காட்டாய தனிமைப்படுத்துதல் போன்றவற்றையும் கடைபிடிக்குமாறு சர்வதேச பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் இதுவரை யாரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வேகத்தில் 23 நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது மக்களை பீதியடைய செய்துள்ளது. மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

மாணவியின் தற்கொலையால் தவறாக நினைக்கும் மாணவர்கள்…அவமானத்தில் பள்ளி ஆசிரியர் தற்கொலை..!

suma lekha

இந்திய நீதித்துறையில் முதன்முறையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள ‘பிரெய்லி பிரிண்டர்’…!

Lekha Shree

ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதான்…

Tamil Mint

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா? – அண்ணாமலை விளக்கம்

Lekha Shree

மூன்று புதிய இணையதளங்களை தொடங்கியுள்ள தமிழ்நாடு மின்சார வாரியம்

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று…!

Lekha Shree

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி வழக்கு.!

suma lekha

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 10 பேருக்கு கொரோனா.!

suma lekha

சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

Lekha Shree

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint