அரசுவின் மர்ம மரணம்… சிக்கலில் அன்னப்பூரணி..!


வாரா வாரம் நெட்டிசன்களுக்கென்று தனியாகவே கண்டெண்ட் கொடுக்க யாராவது வந்துவிடுவார்கள். ஆனால், கடந்த இரண்டு வாரமாகவே கண்டெண்ட்டை வாரி வழங்கி வருபவர் தன்னை ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி.

அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு இருந்தார் அன்னபூரணி. இது ஒரு பக்கம் இருக்க, அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதால் அந்த வீடியோக்களும் இதனுடன் இணைந்து வெளியாகியது.

Also Read  கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?
சங்கரு! அரசு! செந்திலு! ரோகித்து….!: அன்னப்பூரணியின் அட்ரா அட்ரா அப்டேட்ஸ்  | Tamil nadu viral pen samiyar annapoorani arasu amma news updates

பிறகு சாமியாரான அன்னப்பூரணி விவகாரத்தில் காவல்துறையும் இறங்க, இறுதியில் அன்னபூரணியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. மேலும் அன்னப்பூரணி மீது இந்து அமைப்பினர் அளித்த 5 புகார்கள் நிலுவையில் உள்ளது. இந்த புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தன்னுடைய பிரச்சனைக்கு கமிஷனர் ஆபீசில் புகார் ஒன்று தரப்போன அன்னப்பூரணிக்கு எதிராக இறந்துபோன அரசு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

Also Read  அன்னபூரணி ‘அம்மா’வுக்கு போட்டியாக களமிறங்கிய டிக்டாக் சாதனா!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இவர் தான் வேண்டும் என்று அரசுவை அழைத்துச் சென்ற அன்னப்பூரணி, சில ஆண்டுகள் கழித்து அரசு இறந்துவிட்டதாக கூறினார். இதனைத் தொடர்ந்து அரசுவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுவின் முன்னாள் மனைவி, அம்பத்தூர் ஸ்டேஷினில் புகார் தந்துள்ளார். இது தற்போது அன்னப்பூரணி வாழ்க்கையில் புயலை கிளப்பி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அன்னபூரணி நடத்தும் முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தரப்படும் பிரசாதத்தில் ஏதேனும் மயக்கும் வஸ்து கலந்துள்ளதா? என்று போலீஸ் விசாரணையை துவக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், மக்கள் தன்னை நம்பி திரளும் போதெல்லாம் அவர்களிடம் அதிக அளவில் காணிக்கையாக பணத்தை அன்னப்பூரணி கறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்…!

Devaraj

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

Tamil Mint

அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்… வைரல் வீடியோ!

Devaraj

“அப்பா நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்” – சுருதி மற்றும் அக்‌ஷரா அறிக்கை!

Tamil Mint

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

மாற்றுத்திறனாளியுடன் கட்டணமின்றி ஒரு உதவியாளர் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை செயலாளர் அறிவிப்பு.!

suma lekha

மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

Tamil Mint

5 உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Tamil Mint

திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பணிகள் தொடக்கம்

Tamil Mint

தமிழக பொறியியல் கல்லூரி சேர்க்கை குறித்த அதிர்ச்சி நிலவரம்

Tamil Mint

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?

sathya suganthi

கொரோனா வார்டில் இருந்து தப்ப முயன்ற பெண் பலியான பரிதாபம்

Tamil Mint