ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை திரட்ட பா.ஜ.க முடிவு


ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை உருவாக்கும் நோக்கில் 25 இணையதளக் கருத்தரங்குகளை நடத்த பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் அனைத்து தேர்தலும் அதாவது மக்களவைத் தேர்தல் முதல் சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

Also Read  வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

சமீபத்தில் 80வது அனைத்து இந்திய அதிகாரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களில் சில மாதங்கள் நடக்கும் தேர்தல் பணிகளால் தேசத்தின் வளர்ச்சி பாதிக்கிறது. அதனால், ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.

நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான சட்ட ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அளித்த பரிந்துரையில், “மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துவது, மக்கள் பணத்தை சேமிக்க உதவும். ஆனால், ஏற்கெனவே இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்தல், ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை. அதனால், அரசியலமைப்புச்ச ட்டத்திலும், தேர்தல் சட்டத்திலும் மாற்றங்கள் செய்வது அவசியம்” எனப் பரிந்துரைத்தார். 

Also Read  மத்திய அமைச்சரின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

நிதி ஆயோக் சமீபத்தில் அளித்த ஆலோசனையில், “2024ம் ஆண்டிலிருந்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலை இரு கட்டங்களாக ஒன்றாக இணைத்து நடத்தலாம், நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்படாமல், குறைந்த அளவிலான பிரச்சாரத்தை மட்டும் முன்னெடுக்கலாம்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவைத் திரட்டும் நோக்கில் 25 இணையதளக் கருத்தரங்குகளை பாஜக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அதில் கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Also Read  கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு

Tamil Mint

இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் – தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்

Tamil Mint

“கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!” – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Lekha Shree

72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி

Tamil Mint

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

கொரோனா 2 அலைகளும் ஒன்றுக்கொன்று சலைச்சது இல்லை – மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்கள்

Devaraj

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree

கொரோனா தடுப்பு ஊசி வேண்டாம்- அச்சத்தில் தெறித்து ஓடும் கிராம மக்கள்

Shanmugapriya

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்… கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

Tamil Mint