பொங்கல் விடுமுறைக்கு பின் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்?


தமிழகத்தில் பொங்கலுக்கு பின் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது,

கொரோனா மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில், 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும் படியும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தும்படியும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. 10 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே நேரடி வகுப்புகள் வைக்கப்படுகிறது. நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் இல்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு” என தெரிவித்தார்.

Also Read  தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்..!

இந்த நிலையில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்த பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பைக் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துங்கள்: உயர்நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…!

Lekha Shree

‘ஜெய் பீம்’ சர்ச்சை – சூர்யா ரசிகர் மன்ற பேனருக்கு தீ வைத்த இளைஞர்கள்…!

Lekha Shree

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு! ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த 10,12-ம் வகுப்பு மாணவர்கள்!

Tamil Mint

மோடியை பின்னுக்கு தள்ளி யூடியூப்பில் சாதனை படைத்த ஸ்டாலின்!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree

“அம்மா.. அம்மா தான்.. மத்ததெல்லாம் சும்மா!” – சசிகலாவை விமர்சித்த ஜெயக்குமார்..!

Lekha Shree

எமனே வந்து எச்சரித்தாலாவது கேட்போமா?… கோவையில் நடுரோட்டில் அரங்கேறிய ருசிகர சம்பவம்…!

Tamil Mint

நவம்பர் 1 முதல் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

Lekha Shree

வண்டலூர் பூங்கா அக்., 9ம் தேதி இயங்காது… காரணம் இதுதான்.!

suma lekha

குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது – தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!

Devaraj

அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

Tamil Mint

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்

Tamil Mint