“ஆந்திராவிற்கு ஒரு தலைநகர் தான்!” – பின்வாங்கிய ஜெகன் மோகன் ரெட்டி அரசு..!


ஆந்திர மாநில அரசு 3 தலைநகரம் அமைக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என பிரிக்கப்பட்ட பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகிலுள்ள அமராவதியை மாநிலத்தின் தலைநகராக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அமராவதியை மாநில தலைநகராக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்றது. ஆனால், 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என கூறினார்.

Also Read  கரூர்: எம்.பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

அவற்றில் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், சட்டமன்ற தலைநகராக அமராவதி, நீதித்துறை தலைநகராக கர்னூல் ஆகியவை இருக்கும் என அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

அதனை அடுத்து ஆந்திர அரசின் முடிவை எதிர்த்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Also Read  தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

அந்த வழக்கு விசாரணையில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட மத்திய அரசு நீதிமன்றத்தில், “ஒரு மாநிலத்திற்கு தலைநகரம் அமைக்கும் முடிவு என்பது முழுக்க முழுக்க அந்த மாநில அரசு தொடர்புடையது, எனவே இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது” என தெரிவித்தது.

இந்த வழக்கில் மனுதாரராகிய ஆந்திர மாநில அரசு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஆந்திராவுக்கு ஒரே ஒரு தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் வெளியிடுவார்” என கூறியுள்ளது.

Also Read  பஞ்சாப் முன்னாள் முதல்வருடனான உறவு... விளக்கம் கொடுத்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு! ஒரு சிலிண்டர் விலை ரூ.915.50

suma lekha

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint

நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

Devaraj

கான்பூர் டெஸ்ட்: முதல்நாளில் இந்திய அணி 258 ரன்கள் குவிப்பு..!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

பிப்.22-ல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் – பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்.?

Bhuvaneshwari Velmurugan

சிக்னல் செயலியை உருவாக்கியவர் ஓர் இந்தியாரா..?

Tamil Mint

கோலி-அனுஷ்காவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தாஜ் ஹோட்டல்…! வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Shanmugapriya

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj