திருவண்ணாமலை கோயிலுக்கு செல்ல இது எல்லாம் கட்டாயம்.!


2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

OLYMPUS DIGITAL CAMERA

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு தரப்பில் கடும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஞாயிறு முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Also Read  குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்…! ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா..!

இந்நிலையில் திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்ய 2 தவணை தடுப்பூசி கட்டாயம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 10.01.2022 (திங்கட்கிழமை ) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறோன்.

Also Read  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகளுடன் அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

சுவாமி தரிசனம்‌ செய்ய வருகை தருபவர்கள்‌ கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்‌ செலுத்தியற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில்‌ பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால்‌ மட்டுமே திருக்கோயில்‌ வளாகத்திற்குள்‌ அனுமதிக்கப்படுவார்கள்‌.

தற்போது, கோவிட்‌ நோய்‌ தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும்‌ நிலையில்‌, பக்தர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ நோய்‌ தொற்று பரவலை தடுக்கும்‌ இத்தகைய முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ கொரோனா தொற்று அதிகளவில்‌ பரவாமல்‌ இருக்க உதவிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌ என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

Also Read  தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - முழு விவரம் இதோ...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி”.. அமைச்சர் பெருமிதம்!

suma lekha

ஆபாச வீடியோ முதல் சிவசங்கர் பாபா வரை.. : வசமாக சிக்குகிறாரா கே.டி.ராகவன்.!

mani maran

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

“சமூகநீதியை பாழ்படுத்தும் வகையில் விஷம பிரச்சாரம்!” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

சென்னையில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

suma lekha

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

அசுரன் பட பாணியில் நடந்த கட்டப்பஞ்சாயத்து! வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

sathya suganthi

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

”மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

suma lekha

“பேருந்து கட்டணம் உயராது” – போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

Lekha Shree

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

Lekha Shree