குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!


குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சுமார் மதியம் 12:20 மணிக்கு நடந்ததாகவும் ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read  "புலியின் குகை பூனைகளுக்கு பரிசா?" - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்..!

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மூவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

மேலும், விபத்து குறித்து கேட்டு அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read  முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குறைந்த கட்டணத்தில் தடையற்ற மின்சாரம் – அமைச்சர் ஆர்.கே.சிங்..!

suma lekha

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

பிரதமர் மோடியின் சென்னை வருகையும் – பயண விவரங்களும்..!

Tamil Mint

ஆசிரியர் தந்த பாலியல் தொல்லை…. தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி…!

Lekha Shree

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது…!

Lekha Shree

“உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்” என மிரட்டல் விடுத்த நபர்: காலில் விழுந்து கதறிய தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த நபர்.

mani maran

கேரளா அருகே கடலுக்கடியில் தீவு? வியப்பூட்டும் தகவல்கள்…!

sathya suganthi

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை ரத்து – முழு விவரம்…!

Devaraj

இன்று முதல் அக்னி நட்சத்திரம்…! மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை…!

sathya suganthi

தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

சென்னை-மதுரை சிறப்பு ரயில் ரத்து

Tamil Mint