முல்லை பெரியாறு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட ஓபிஎஸ் வலியுறுத்தல்..!


முல்லைப் பெரியாறு விவாகரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பினில் கூறியுள்ளது.

Also Read  முல்லை பெரியாறு அணை விவகாரம் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக இடையூறு அளித்து வரும் கேரள அரசை முதல்-அமைச்சர் தட்டிக்கேட்க வேண்டும். மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும். புதிய அணை கட்டுவது தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Also Read  அவைத்தலைவராக சசியை பரிந்துரைக்கும் பாஜக...ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைக்கும் இபிஎஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

சூடுபிடிக்கும் தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு

Tamil Mint

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., காரில் கட்டுக்கட்டாக பணம் – ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை…!

Devaraj

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு விருது

Tamil Mint

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

‘பெகாசஸ்’ விவகாரம்: தமிழில் முழக்கமிட்ட பஞ்சாப் எம்.பி… அதிர்ந்த நாடாளுமன்றம்..!

Lekha Shree

அனைவருக்கும் இ-பாஸ் அமலுக்கு வந்தது, அதிக அளவில் சென்னைக்கு திரும்பும் மக்கள்

Tamil Mint

தமிழக பட்ஜெட் தாக்கல் – சட்டமன்றத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு…!

Lekha Shree

உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!

Lekha Shree