2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் – யார், யாருக்கு என்ன விருது?


கலை, இலக்கியம், சமூகப்பணி என பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்றும் இன்றும் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

பத்ம விருதுகள் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதில், 7 பேருக்கு பத்ம விபூஷண், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

அவர்களில் 16 பேருக்கு மறைந்த பிறகு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களில் 29 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  தலைநகரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்..கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு..!

பத்மவிபூஷன் விருது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இந்துஸ்தானி பாடகர் சானூலால் மிஸ்ரா, ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்து மேரி கோம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சமூக செயல்பாட்டாளர் பிரகாஷ் ஜோஷி, மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் டாக்டர் ஜமீர், ஆன்மீகவாதி மும்தாஜ் அலி, தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் கோபால் மகேந்திரா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

Also Read  விக்கெட் இழந்த விரக்தி...விராட் கோலி செய்த செயல் : வைரலாகும் வீடியோ

அதை தொடர்ந்து சாந்தாலி மொழி இலக்கியவாதி தமயந்தி, சின்னத்திரை-வெள்ளித்திரை நடிகை சரிதா ஜோஷி, இசையமைப்பாளர் அட்நன், கரண் ஜோகர், தமிழகத்தின் தென்காசியை சேர்ந்த ஆயக்குடி அமர்சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், நாதஸ்வர இசைக்கலைஞர் காலீஷாபி மெஹபூப், ஷேக் மெஹபூப் சுபானி, ஓவியக் கலைஞர் மனோகர் தேவதாஸ், சமூக பணிகளில் சிறந்து விளங்கிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி துளசி கவுடா மற்றும் நடிகை கங்கனா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நவம்பர் 16 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவின் தவறான வரைபடம் - ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

மவ்லும், தமிழகத்தை சேர்ந்த மறைந்த பாடகர் எஸ்.பி, பாலசுப்பிரமணியம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, கூடைப்பந்து விளையாட்டில் சாதித்த அனிதா உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்தடுத்து கொரானாவில் பாதிக்கும் இந்திய அணி வீரர்கள்..!

mani maran

தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

Devaraj

மழையில் ஜாலியாக நடனமாடிய வனத்துறை பெண் ஊழியர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

குடிபோதையில் வேறொருவரின் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி…!

Lekha Shree

கர்நாடகா: மரபணு மாற்றமடைந்த AY.4.2 வகை கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்பு..!

Lekha Shree

இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

Tamil Mint

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் – 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு…!

sathya suganthi

நாட்டையே உலுக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியின் தற்போதைய நிலை குறித்த வீடியோக்கள் இதோ!

Tamil Mint

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint

”கேல் ரத்னா பெயர்மாற்றம்… வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு கண்டனம் தெரித்த எம்.பி.விஜய் வசந்த்..!

suma lekha

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

Lekha Shree