a

கே.எல். ராகுலின் பொறுப்பான ஆட்டம் – பெங்களூரை வென்ற பஞ்சாப் கிங்ஸ்!


அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலுடன் இணைந்து பிரப் சிம்ரன் சிங் களம் இறங்கினார்.

காயம் காரணமாக மயங்க அகர்வால் விளையாடவில்லை. சிங் 7 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்து கிறிஸ் கெய்ல் களத்திற்குள் வந்தார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசி மிரட்டினார்.

எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர் டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் டி வில்லியர்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெய்ல் ராகுல் ஜோடி பொறுப்புடன் விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையைக்கட்டினார்.

மறுமுனையில் கேஎல் ராகுல் பொறுப்புடன் விளையாடி பஞ்சாப் அணிக்கு ரன்களை சேர்த்துக் கொடுத்தார். கடைசியாக களமிறங்கிய ஹர்பிரீத் சிறப்பாக விளையாடி 17 பந்துகளில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார். ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 5 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார்.

Also Read  ரோஹித், ஷ்ரேயாஸ்க்கு காயம் - கதி கலங்கும் ஐபிஎல் அணிகள்

இதன்மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 சேர்த்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்தில் அதிரடி காட்டியது. இருப்பினும் 19 ரன்னிலேயே முதலில் விக்கெட்டை பறிகொடுத்தது.

படிக்கல் 6 பந்துகளில் ஒரு சிக்சர் மட்டும் விளாசி 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிலே மெரிடித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளேன் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Also Read  பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

டிவில்லியர்ஸ் 9 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்கள் மட்டுமே எடுத்து கீப்பர் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.

துல்லியமாக பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து அசத்தியது. பஞ்சாப் அணியின் மிரட்டலான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூர் அணி வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

கடைசி கட்டத்தில் ஹர்ஷல் பட்டேல் 13 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசினார். இருப்பினும் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணி தரப்பில் பவுலர்கள் அனைவருமே சிறப்பாக பந்து வீசினர். ஹர்ப்ரீட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

Also Read  ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் - சொல்வது யார் தெரியுமா?

ஆட்டநாயகனாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக பங்காற்றிய ஹர்ப்ரீத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் பஞ்சாப் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோதுகிறது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபில் ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஆஸ்திரேலியா அணியில் சேர்ப்பு!

Lekha Shree

3ம் நிலை வீரராக களமிறங்கி 10,000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை!

Lekha Shree

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்!

Lekha Shree

4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி திணறல்!

Lekha Shree

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

Lekha Shree

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

ஐசிசி பிப்ரவரி மாத விருது – பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

Lekha Shree

டெஸ்ட் கிரிக்கெட்டின் அசல் ஆட்டம் இது – விராட் கோலி

Tamil Mint

“உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது யார் கிரிக்கெட்டை பார்ப்பர்?” – ஆடம் ஜாம்ப்பா

Lekha Shree

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புது மாப்பிள்ளை ஜஸ்பிரித் பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Jaya Thilagan