தமிழக வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!


நெல்லையில் தமிழக வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான தொ.பரமசிவன் காலமானார். அவருக்கு வயது 70. பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

பன்னாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர் மற்றும் திராவிட கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர் முனைவர் தொ.பரமசிவன். தனது நூல்கள் மூலம் தமிழ்ப் பன்னாட்டின் வேர்களை எடுத்துரைத்து வந்தார் முனைவர் தொ.பரமசிவன்.

Also Read  தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்

தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950ல் பிறந்தவர். மதுரை பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழும் படித்தவர்.

தமிழ் மொழியின் மீது பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டவர் தொ. பரமசிவன். ஆனால் தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்காக சமஸ்கிருதமும் பயின்றார்.

Also Read  சென்னை: 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை!

அழகர் கோயில் நூலுக்குப் பிறகு வெளிவந்த அவரது “அறியப்படாத தமிழகம்” என்னும் நூல், அவரை இலக்கிய உலகில் புகழ் பெற செய்தது. 

அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அவரது மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நேரிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read  யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10, 12-ம் வகுப்புகளின் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

வெள்ளி வென்ற ‘தங்கமகன்’ மாரியப்பனை வாழ்த்திய திமுக எம்.பி. கனிமொழி..!

Lekha Shree

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!

sathya suganthi

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்… அதிமுகவில் நிலவும் பதற்றம்…!

Lekha Shree

தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை – PSBB கராத்தே மாஸ்டர் கைது..!

sathya suganthi

கல்லூரி மாணவியை கொலை செய்து இளைஞர் தற்கொலை முயற்சி..! தாம்பரத்தில் பரபரப்பு..!

Lekha Shree

ரேஷன் கடையில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ பதிவு

sathya suganthi

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை..!

Lekha Shree

இணைபிரியாத பாசம்: கணவர் கொரோனாவால் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

Shanmugapriya

இசையமைப்பாளர் இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint