a

தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!


தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா 2ம் அலையின் அச்சுறுத்தல் காரணமாக 2 முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தாக்கம் கணிசமாக குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதனால், கொரோனா முடிவுக்கு வந்த பின் பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்றும் எப்போது நடத்தலாம் என்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

Also Read  தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு பொதுதேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார்.

அந்தவகையில் கொரோனாவின் வீரியம் கணிசமாக குறைந்த பின்னர் ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read  காங்கிரஸ் கட்சிக்கு 15+1 அல்லது 20+0?திமுகவின் புதிய ஆஃபர்

அதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசின் நிலைப்பாட்டை வைத்தும் தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

அந்த வகையில் பிரதமர் மோடி மாணவர்களின் நலன் கருது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

Also Read  அதிமுகவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அதனால் அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என அறிவித்தார்.

இதற்காக ஆன்லைன் வாயிலாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் +2 பொதுத்தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

Ramya Tamil

மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு!

Tamil Mint

ஒரே தொகுதியில் அதிமுக, பாஜக தனித்தனியே பிரச்சாரம்!

Lekha Shree

ATM-ல் கொள்ளையடித்த வங்கி ஊழியர் – சிக்கியது இப்படித்தான்!

Lekha Shree

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர்”: கே.பி.ராமலிங்கம்

Tamil Mint

சென்னையில் மூன்று வருடங்களுக்கு பிறகு மிக அதிக மழை

Tamil Mint

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

கட்சித் தலைவர்கள் புகைப்படம் இல்லாத நிவாரணப் பை – அசத்தும் தமிழக அரசு

sathya suganthi

சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 17.5.2021

sathya suganthi