இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் 19ம் ஆண்டு நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி


கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாராளுமன்றத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலால் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதன் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுமசரிக்கப்படுகிறது. 

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

“2001ல் பாராளுமன்றம் மீது நடத்தப்பட்ட கோழைத்தமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது. பாராளுமன்றம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவுக்கூறுவோம். எப்போதும் அவர்களுக்கு இந்தியா நன்றி செலுத்தும்” என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read  "நோய்நாடி நோய் முதல்நாடி" திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி யோக தின உரை…!

“2001ல் இதே நாளில் பாராளுமன்றத்தை பாதுகாத்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான தியாகிகளை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. நமது ஜனநாயக ஆலயத்தின் பாதுகாவலர்களின் பெரும் தியாகத்தை நினைவுகூரும் அதே வேளையில், பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கான எங்கள் வழியை நாங்கள் பலப்படுத்துகிறோம்” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

“2001ல் பாராளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதலில் இருந்து நமது ஜனநாயகத்தின் ஆலயத்தை பாதுகாப்பதற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான மனிதர்களுக்கு ஒரு பெரிய அஞ்சலி! பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது. பயங்கரவாத சார்பு நாடுகளுக்கு எதிராக உலக சமூகம் ஒன்றுபட வேண்டும்” என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

Also Read  32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு - மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“5 முறை போன் மாற்றியும் ஒட்டுக்கேட்பது ஓயவில்லை” – பிரஷாந்த் கிஷோர் ஆவேசம்!

Lekha Shree

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

Devaraj

இந்தியாவை உலுக்கும் கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 4,077 பேர் பலி

sathya suganthi

பிறந்து 14 நாட்களே ஆன கொரோனாவுக்கு பலியான பச்சிளம் குழந்தை…!

Devaraj

டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

Tamil Mint

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

பவுடர் வடிவிலான கொரோனா மருந்து – இன்று முதல் விநியோகம்

sathya suganthi

ஆபாச பட வழக்கு – ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின்…!

Lekha Shree

யார் இந்த ஸ்டேன் சாமி? இவர் கைதாக என்ன காரணம்? நாடு முழுவதும் இவர் இறப்பை பற்றி பேசுவது ஏன்?

Lekha Shree

தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு:

Tamil Mint

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil