a

ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!


நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமைடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இன்று இந்திய மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் பொருட்களை வாங்குவதற்காக ‘பி.எம் கேர்ஸ் ஃபண்டுக்கு’ $ 50,000 நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.

Also Read  இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்… எழும் எதிர்ப்புகள்; ஸ்டோக்ஸ் சொன்ன பன்ச்!!

மேலும், சக வீரர்களையும் பங்களிப்பு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்திய நாட்டை நான் பல ஆண்டுகளாக நேசித்து வருகிறேன். இங்குள்ள மக்கள் மிகவும் அருமையானவர்கள் மற்றும் கனிவானவர்கள். இப்போது பலர் இங்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிவது என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

Also Read  மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

கொரோனா நோய்த்தொற்று விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது ஐபிஎல் தொடர்வது பொருத்தமானதா என்பது குறித்து இங்கு சில விவாதங்கள் நடந்துள்ளது.

மக்கள் பொதுமுடக்கத்தில் இருக்கும்போது ஐ.பி.எல் விளையாடுவது நாட்டிற்கு கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாளும் சில மணிநேர மகிழ்ச்சியையும் ஓய்வு நேரத்தையும் அளிக்கிறது என்று இந்திய அரசு கருதுவதாக நான் நினைக்கிறன்.

Also Read  தசராவுக்கு வெளியாகும் 'கேஜிஎப்' படத்தின் 2ம் பாகம்?

இந்த ஐபிஎல், வீரர்களாகிய எங்களை மக்களுக்கு நன்மைகளை வழங்க ஏதுவான ஒரு தளமாக இருக்கிறது. அதை மனதில் கொண்டு, பி.எம் கேர்ஸ் ஃபண்டுக்கு நான் $ 50,000 நன்கொடையாக அளித்துள்ளேன், குறிப்பாக இந்தியாவின் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் பொருட்களை வாங்க.

எனது சக ஐபிஎல் வீரர்களையும் – இந்தியாவின் மீது பற்று கொண்ட உலகெங்கிலும் உள்ள அனைவரையும் பங்களிக்க ஊக்குவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

Tamil Mint

ரோஹித், ஷ்ரேயாஸ்க்கு காயம் – கதி கலங்கும் ஐபிஎல் அணிகள்

Devaraj

4-வது டெஸ்ட் போட்டி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?

Lekha Shree

தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ…!

Lekha Shree

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது

Tamil Mint

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ஜாம்பவான் மெக்ராத்தின் வளர்ப்பு பிரசித் கிருஷ்ணா…!

Lekha Shree

டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ள தமிழக வீரர்கள்… வெற்றியை நோக்கி இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதல்!

Tamil Mint

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி – சிந்து முன்னேற்றம்; சாய்னா விலகல்!

Lekha Shree

பந்தில் எச்சில் தடவிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸ் – எச்சரித்த நடுவர்கள்!

Lekha Shree

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree