‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!


இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவின் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தி வயர், தி கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உள்பட பல சர்வதேச ஊடகங்களில் இந்த புலனாய்வு செய்தி நேற்று இரவு வெளியிட்டுள்ளனர்.

ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவுபார்க்க பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள். அதன்படி இந்த பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்காணிக்கும்.

பின்னர், அதில் இருக்கும் மேசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் ஆகியவற்றை உளவு பார்க்கும். மேலும், தாக்குதலுக்கு உள்ளான மொபைலின் மைக்ரோபோன்களையும் இதனால் ரகசியமாக இயக்க முடியும்.

உலகெங்கிலும் உள்ள சமூக உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் செல்போன் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 21 நாடுகளைச் சேர்ந்த 200 பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  ஒரு மணிநேரத்தில் 12 அசைவ உணவுகளை சாப்பிட்டு புல்லட் பைக்கை அசால்டாக தட்டிச்சென்ற நபர்! புது வித foodie challenge!

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 2 அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

தி இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ், நெட்வர்க் 18 போன்ற செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் முன்னணி பத்திரிக்கையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதைத்தொடர்ந்து தி நியூயார்க் டைம்ஸ், ஏஃப்பி, சிஎன்என், அல் ஜசீரா உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கியது என்எஸ்ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனம். உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்துள்ளது.

Also Read  உ.பி. முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தியா? பாஜகவுக்கு டஃப் கொடுப்பாரா?

இதுகுறித்து என்எஸ்ஓ நிறுவனம் கூறுகையில், “இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், எங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை” என தெரிவித்துள்ளது.

மேலும், “பெகாசஸ் மென்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது நல்ல மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது” என என்எஸ்ஓ கூறியுள்ளது.

இதுகுறித்து பார்பிட்டன் ஸ்டோரிஸின் நிறுவனர் கூறுகையில், “இந்த பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதலால் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது” என தெரிவித்தார்.

Also Read  இந்தியா: உருமாறிய கொரோனாவால் மேலும் 4 பேர் பாதிப்பு!!

இதுபோல் கடந்த 2019ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் மூலம் 1,400 மொபைல் போன்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாக வாட்ஸ்ஆப் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், எந்த தவறும் செய்யவில்லை என அந்நிறுவனம் மறுத்தது. எனினும் அந்த நிறுவனம் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Devaraj

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

Tamil Mint

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!

Lekha Shree

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு!

Shanmugapriya

அமிதாப்பச்சனுக்கு கொரோனா

Tamil Mint

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்…

VIGNESH PERUMAL

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா

Tamil Mint

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…! கேரளா அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி

Devaraj

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj