“மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது!” – சென்னை உயர்நீதிமன்றம்


மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு திருமண சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதி சான்றிதழ் பெற்ற அவர், தனக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், “மதம் மாறியவர்களுக்கு சாதிமறுப்பு மணச்சான்று வழங்க முடியாது” எனக் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா உயிரிழப்புகள்…!

இதையடுத்து அதை எதிர்த்து பால்ராஜ் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 1997ஆம் ஆண்டு அரசாணைப்படி மதம் மாறிய நபர்களுக்கு சாதி மறுப்பு மணச் சான்றிதழ் வழங்க முடியாது என குறிப்பிட்டு மனுதாரர் கோரிக்கையை நிராகரித்தது சரி என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

Also Read  உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்…!

இதை அடுத்து மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு மணச்சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், “மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை. ஒரே சாதியையோ வகுப்பையோ சேர்ந்த கணவன்-மனைவிக்கு சாதி மறுப்பு மணச் சான்று பெற தகுதியில்லை. மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு மணச் சான்றிதழ் வழங்கினால் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட கூடும்”என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Also Read  "எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்..!" - அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேல் யாத்திரையை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம்: பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! – எவைகளெல்லாம் செயல்பட தடை?

Lekha Shree

வெறும் 4 நாட்கள் மட்டும் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்குமா?

Tamil Mint

ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

sathya suganthi

கண்முன்னே பெற்ற குழந்தைகளை பறிகொடுத்த தந்தை… சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை..!

Lekha Shree

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம்..!

Lekha Shree

வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – 50 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி

sathya suganthi

குற்றாலத்தில் குளிப்பதற்கு மீண்டும் தடை!!

Tamil Mint