மது வாங்க ஆர்வம் காட்டாத மதுபிரியர்கள்? எங்கு தெரியுமா?


கொரோனா தொற்று காரணமாக கடந்த மே 10ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட தொற்று பரவல் அதிகம் இருந்த 11 மாவட்டங்கள் அல்லாத 27 மாவட்டங்களில் இரண்டு வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இதனால் குடிமகன்கள் பலர் தஞ்சை மாவட்டத்தில் இருந்து அருகில் உள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டத்திற்கு சென்று மதுபானங்களை வாங்கி அருந்தி வந்தனர்.

Also Read  உதயநிதி ஸ்டாலின் ஏன் கைது செய்யப்பட்டார்?

இந்த நிலையில் தமிழக அரசு இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அறிவித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகளும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டன.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளும் 56 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது.

Also Read  அமைச்சர் மரணத்தில் மர்மம், ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

ஆனால், அம்மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதும் பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மதுபானம் விற்கப்படும் கடைகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மது கடைக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு 11 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி!

இதனையடுத்து ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதும் ஆளரவமின்றி அக்கடைகள் வெறிச்சோடி காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடலூரில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Tamil Mint

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடம்! வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 10,448 பேர் பாதிப்பு…!

Lekha Shree

“வாத்தி ரெய்ட்”-க்கு பலன் கிடைக்குமா? எல்.முருகன் தாராபுரத்தில் வெற்றி பெறுவாரா?

Devaraj

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

Devaraj

தமிழகத்தில் முதல்முறை – பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

Lekha Shree

ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்…! அதன் பின்னர் கொடுத்த அட்வைஸ்…! நடந்தது என்ன…?

Devaraj

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint