a

ஊரடங்கு உத்தரவை மீறி இறுதி ஊர்வலத்துக்கு திரண்ட மக்கள்… யாருக்காக தெரியுமா?


திருப்பூரில் பட்டப்பகலில் கூட்டத்திற்குள் கத்தியை உருவி ரவுடியை குத்திய வழக்கில் வீடியோவுடன் சிக்கியதால் பிரபலமான சம்சுதீன், தற்போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் வழிப்பறி செய்து கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் நடந்த மோதலில் சம்சுதீன் தனது கூட்டாளிகளால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read  மண்டலா வாரியாக சென்னையில் கொரோன நிலவரம்.

சம்சுதீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சமூக இடைவெளியை மறந்து அவரது நண்பர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். மேலும், இருசக்கர வாகனத்தில் பேரணி நடத்தப்பட்டதாகவும் சர்ச்சை உருவாகியுள்ளது.

சம்சுதீன் திருப்பூர் எம்ஜிஆர் காலனியை சேர்ந்தவர். இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

சம்சுதீன் மீது பல வழக்குகள் இருந்தாலும் உள்ளூர் இளைஞர்களுக்கு உதவிகரமாக இருந்ததால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊரடங்கு உத்தரவை மீறி சம்சுதீன் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர்.

ஆனால், அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் எவரும் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிணக்கூறாய்வு முடிந்து சம்சுதீன் சடலம் ஒப்படைக்கப்பட்டவுடன் அந்தப் பெரும் கூட்டம் அப்படியே இரு சக்கர வாகனத்தில் நீண்ட ஊர்வலமாக அமரர் ஊர்தி பின்தொடர்ந்தனர்.

Also Read  மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி!

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது, அதிமுக செயற்குழு

Tamil Mint

ஆகஸ்ட் இறுதி வரை ஈ பாஸில் மாற்றம் இல்லை, இபிஎஸ் அதிரடி முடிவு

Tamil Mint

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

“போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Lekha Shree

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

“பிச்சை எடு” என கூறிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த ‘கேப்டன்’ மகன்..!

Lekha Shree

“என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை” – மு.க. அழகிரி

Lekha Shree

பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளால் நிறைந்துள்ள ஆழ்கடல்? நீச்சல் வீரர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

“2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நிராக்கரிக்கப்படும் கட்சியாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.

Tamil Mint

திருடு போன துப்புரவு வாகனங்கள் – தேடும் துாய்மை பணியாளர்கள்!

Lekha Shree