லிவிங் டுகெதர்-ல் வாழ்பவர்கள் நீதிமன்றம் நாட எந்த உரிமையும் இல்லை – உயர்நீதிமன்றம்!


திருமணம் செய்யாமல் (லிவிங்-டுகெதர்) சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், ஜோசப் பேபி என்பவரை 2013-ல் திருமணம் செய்ததாகவும், 2016 முதல் ஜோசப் தனியாக வசித்து வருவதால் தங்களை சேர்த்து வைக்கக்கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Also Read  தமிழகம்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

ஆனால், தனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதால், அவரது வழக்கை நிராகரிக்கக்கோரி ஜோசப் பேபியும் மனுத்தாக்கல் செய்தார்.

இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நவம்பர் 1-ம் தேதி தான் தமிழ்நாடு நாள்” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Lekha Shree

விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

Tamil Mint

அக்டோபரில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்… தேதிகள் அறிவிப்பு..!

Lekha Shree

இதுவே எனக்கு தரும் பரிசு- கமல்ஹாசன் ட்வீட்!

suma lekha

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

உருவானது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Lekha Shree

தேய்பிறையாக மாறிய தேமுதிக? மீண்டும் முழு நிலவாக ஜொலிக்குமா?

Tamil Mint

எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதனை தேடும் நெட்டிசன்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Mint

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Lekha Shree

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைக்க தயார் : தமிழக காவல்துறை

suma lekha