தாறுமாறாய் எகிறிய தக்காளி விலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!


ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ரூ.140-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தக்காளி மிஞ்சியுள்ளதை எண்ணி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மழையால் விளைச்சல் பாதித்ததன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Also Read  நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

கடந்த அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால், தமிழகம் முழுவதும் பயிர்கள் நீரில் மூழ்கின, காய்கறிகள் அழுகிப்போயின.மேலும், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடக மற்றும் ஆந்திராவிலும் வெள்ள பாதிப்பு காரணமாக விளைச்சல் இல்லை. இதனால் தமிழகத்திற்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிலோ தக்காளி ரூ. 15 விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 140 வரை விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஏரியாவுக்கு தகுந்தாற்போல் கிலோ ரூ. 160 வரை விற்பனையாகி வருகிறது.

Also Read  ரஜினி முடிவு பற்றி சீமான், திருமா, குஷ்பு மற்றும் கராத்தே கருத்து, வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்

தக்காளி விலை மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 130 ரூபாய்க்கும், கேரட் கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், சென்னையில் பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி கிலோ 79 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்கப்படவுள்ளது. பசுமை கடைகளில் விற்க ஒரு நாளைக்கு 15 டன் தக்காளியை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tamil Mint

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் தமிழ்…! ரிப்பன் மாளிகையை திரும்ப அலங்கரிக்கும் “தமிழ் வாழ்க”

sathya suganthi

அதிமுகவில் சலசலப்பு! – சினேகம் பாராட்டும் முன்னாள் அமைச்சர் காமராஜ், திவாகரன்..!

Lekha Shree

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா?… அண்ணாமலை கருத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

suma lekha

மீனவர்களை மீட்க முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்.!

suma lekha

“மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது!” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

சென்னை மெட்ரோவில் பணிபுரிய 13 திருநங்கையர் நியமனம்!

Tamil Mint

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

செப்டம்பர் 7 ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பஸ், ரயில் சேவை :

Tamil Mint

தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு – வல்லூர் குழு

sathya suganthi

“உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” – சசிகலா பரபரப்பு பேட்டி!

Lekha Shree

தென்காசி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளம்பெண்..!

Lekha Shree