கூடுதல் தளர்வுகள்… மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்


பொதுமக்கள் வரும் மாதங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சை பிரிவை ஆய்வு செய்தார் ராதாகிருஷ்ணன்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இரண்டாம் அலை முடிந்துவிட்டதாக கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கவனக் குறைவாக இருந்ததால் தான் நமக்கு இரண்டாம் அலையே வந்தது.

கொரோனா குறைந்து வரும் சமயத்திலும் தொற்று பரிசோதனையை குறைக்கக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Also Read  ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்றைக்கு 133 நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 43,745 கொரோனா படுக்கைகளில் 3,282 படுக்கைகள் மட்டுமே சிகிச்சைக்கான பயன்பாட்டில் உள்ளன.

உத்திரமேரூரில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 40 பேருக்கு தொற்று ஏற்பட்டது. எனவே, காய்ச்சல் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி எங்காவது 2க்கு மேற்பட்ட தொற்றாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் முழுமையாக கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம்.

Also Read  பச்சை, மஞ்சை, வொயிட், ரோஸ் - இணையத்தில் வைரலாகும் பச்சை பூஞ்சை ட்ரோல்ஸ்!

இனி தமிழகத்திற்கு வரக்கூடிய தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எவ்வளவு தொற்று உருவாகிறது என்பதைப் பார்த்து நடவடிக்கை எடுக்கிறோம்.

கொரோனா வார் ரூமில் எந்த ஒரு தொலைபேசி அழைப்பும் வருவதில்லை. ஆனால், இதனை கவனக் குறைவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

Also Read  தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?

வரும் மாதங்களில் மிக கவனமாக பொதுமக்கள் இருக்க வேண்டும். தளர்வுகள் வந்ததனால் தொற்றே இல்லை எனக் கருதக்கூடாது. முதல்வர் அனைத்து துறைகளும் கண்காணிப்புடன் இருக்க உத்தரவிட்டு உள்ளார் “என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

sathya suganthi

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

வீடு வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி சென்னையில் 100 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

Tamil Mint

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் கூடாது: தமிழக அரசு அதிரடி

Tamil Mint

கொரோனா பரவலை குறைக்க இது தான் தீர்வு – மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

Tamil Mint

பாலியல் புகார் – பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் கைது!

Lekha Shree

அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

Tamil Mint

தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

Tamil Mint

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடும் சென்னை மக்கள்: அதிகரிக்க போகிறதா கொரோனா பாதிப்பு?

Tamil Mint

திமுகவிலிருந்து மேலும் பலர் வெளியே வருவார்கள்: குட்டையைக் குழப்பும் கு க செல்வம்

Tamil Mint