சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!


இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் மீண்டும், இணையவழி தாட்சி அமப்புலிகள் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்வோம் என்று அறிவித்த திமுக அரசு, இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது.

இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றத்திற்கான இலக்கிலிருந்து, இளைய தலைமுறையினரை மடைமாற்றுகிறதென்பதும் வலிமிகுந்த உண்மையாகும்.

Also Read  பிப்ரவரி 30-ம் தேதியில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி! வடிவேலு ரசிகரா இருப்பாரோ?

மேலும், இளைஞர்களின் நற்சிந்தனையை முற்று முழுதாகச் சிதைப்பதோடு, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் நல்வாழ்வினையே பாழ்படுத்தி விடுகிறது. இதனை உணர்ந்தே நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இணையவழி சூதாட்ட கும்பல்கள் நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்றன. இருப்பினும் அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடைசெய்யுமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசிற்கு, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Also Read  கரூர்: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டைகள்..!

தற்போது, தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினால் ஏற்படும் உயிர்ப்பலிகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவும் விரைவில் முடிவடையக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இணையவழி சூதாட்டங்களை இதுவரை தடைசெய்யாது காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆகவே, மக்கள் நலத்தை கருத்திற்கொண்டு, இனியாவது இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்ய, வலுவான தடைச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read  நாம் தமிழர் மற்றும் திமுக கட்சியினரிடையே கைகலப்பு…! தர்மபுரியில் பரபரப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகளிர் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு…! நிதியமைச்சர் தகவல் ..!

Lekha Shree

ஆமை வேகத்தில் இயங்கும் அமைச்சர்கள்: அமைச்சரவையில் அறுவை சிகிச்சை அவசியம்: அதிரடி காட்ட தயாராகும் முதல்வர்.?

mani maran

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் – தென்னக ரயில்வே

Lekha Shree

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

sathya suganthi

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது

Tamil Mint

சென்னைக்கு வருபவர்களுக்கு செக், மாநகராட்சி நடவடிக்கை

Tamil Mint

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கலைமகள் வித்யா மந்திர் பள்ளி நிறுவனர் மீது புகார்!

sathya suganthi