மலையாள நடிகர் திலீப் வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்த வாலிபர்..! கேரளாவில் பரபரப்பு..!


பிரபல மலையாள நடிகர் திலீப் வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் திலீப் வீடு கொச்சி அருகே உள்ள ஆலுவாவில் உள்ளது. இவர் பிரபல நடிகையை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக மூன்று வருடங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read  சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி..!

பின்னர் ஜாமினில் வெளியே வந்த இவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து தனக்கும் தனது வீட்டிற்கும் சொந்தமாக பாதுகாப்பாளர்களை நியமித்தார்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் வீட்டில் இல்லாதபோது இவரது வீட்டின் கேட்டை தாண்டி வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்து அவரது உறவினர்களை பார்த்து ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

Also Read  மீண்டும் இணையும் வெற்றிமாறன்-ஆண்ட்ரியா கூட்டணி..! வெளியான மாஸ் அப்டேட்..!

பின்னர் இதுகுறித்து திலீப் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோவில் வந்தது தெரிந்து அப்பகுதி ஆட்டோ டிரைவர்களை விசாரித்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அந்த வாலிபர் திருச்சூரை சேர்ந்த விமல் விஜய்(31) என்பதும் ஒரு சில மலையாளப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து இருப்பதும் தெரியவந்தது.

Also Read  பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

அதன்பின் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியபோது தான் நடிகர் திலீப்பின் தீவிர ரசிகர், அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்ததாக கூறினார்.

இதை அடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

“டாக்டர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

Jaya Thilagan

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இவரா?

suma lekha

குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! – என்ன சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

‘வலிமை’ இயக்குனரின் போலி ஐடியில் இருந்து வெளியாகும் அப்டேட்கள்…!

Lekha Shree

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya

வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

Lekha Shree

‘வடசென்னை’ ராஜனாக கென் கருணாஸ்? வெளியான ‘மெர்சல்’ அப்டேட்..!

Lekha Shree

27 நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா?…. கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் கேட்ட பெரும் தொகை…!

malar

“சினிமாதான் என்னை தேர்ந்தெடுத்தது” – உதயநிதி ஸ்டாலின்

Shanmugapriya

‘நண்பேன்டா!’ – ரஜினியின் ‘கிளாசிக்’ திரைப்படத்திற்கு பண உதவி செய்த கமல்…!

Lekha Shree