ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா


அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ, ஃபைசர் & பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.  

அதிபர் டிரம்ப், “அடுத்த 24 மணி நேரங்களுக்குள் முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்” எனக் கூறியிருக்கிறார் . 

Also Read  ஒரு மில்லியன் கொசுக்கள் உங்களை கடித்தால் என்னவாகும் தெரியுமா.? | கற்பனைகளின் கதை - 02

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,92,000-த்தைக் கடந்துவிட்டது.

நேற்று, சுகாதாரம் மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் செயலர் அலெக்ஸ் அசார்,  “அமெரிக்காவில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை, திங்கள் அல்லது செவ்வாய் முதல் தொடங்க, தாங்கள் ஃபைசர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவித்து இருந்தார். 

Also Read  மிதக்கும் சீனா - அழிவை ஏற்படுத்திய ஒரு மணிநேர மழை…!

இந்த ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து, பிரிட்டன், கனடா, பஹ்ரைன், செளதி அரேபியா போன்ற நாடுகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த டிசம்பர் மாதத்துக்குள், ஃபைசர் நிறுவனம் அமெரிக்காவுக்கு 6.4 மில்லியன் (64 லட்சம்) டோஸ் மருந்துகளைக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறது. 

Also Read  ”என் வாழ்க்கையின் மோசமான நாட்கள்”: கண்ணீர் விட்டு கதறி அழுத மியா கலிஃபா!

மாடர்னா நிறுவனமும், நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த்தும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துக்கும், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டு அனுமதி கோரப்பட்டு இருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்போது கொரோனா ஹாட்ஸ்பாட்! – தற்போது 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு!

Shanmugapriya

தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்…! உலக சாதனை புரிந்த சிறுமிக்கு குவியும் பாராட்டு…!

sathya suganthi

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் முடக்கம்…!

sathya suganthi

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

“அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

Tamil Mint

ஊரடங்கில் ஆபாச படங்கள் பார்த்த இளைஞர்கள் – வெளியான திடுக்கிடும் டேட்டா..!

Lekha Shree

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

மாபெரும் சிலந்தி வலை – மிரண்டு போன மக்கள்…!

Lekha Shree

2028ம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும்: சி.இ.பி.ஆர்

Tamil Mint

ஜெர்மனி: முடிவுக்கு வரும் 16 ஆண்டுகால ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி…!

Lekha Shree

விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

suma lekha

நேபாளத்தில் வெள்ளம் – 7 பேர் பலி..!

Lekha Shree