வெடித்து சிதறிய எரிமலை – வெளியேற்றப்படும் மக்கள்


பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தால் எரிமலை வெடித்து சிதறியதால் அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரியதும், சிறியதுமான பல எரிமலைகள் உள்ளன. இதில் மிகவும் உயிர்ப்புடன் உள்ள தால் எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது.

Also Read  மீண்டும் 13 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம்…!

தால் ஏரியில் அமைந்துள்ள இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை காரணமாக, அந்நாட்டின் தலைநகரம் மணிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வானம் புகைமூட்டமாக காட்சியளித்தது.

இது கடும் சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரித்து, வெடித்துச் சிதறியது.

Also Read  ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!

தற்போது அந்த எரிமலையில் இருந்து, 1 கி.மீ., உயரத்துக்கு வாயுவும் நீராவியும் வெளியேறி வருகிறது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

ஏற்கனவே சிலர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, அரசின் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

100 ஆண்டுகளுக்கு முன் தால் எரிமலை வெடித்தபோது, 1,300க்கும் அதிகமானோர் பலியாகினர். கடந்த ஆண்டு ஜனவரியில் இந்த எரிமலை வெடித்து சிதறியபோது 15 கி.மீ., உயரத்திற்கு சாம்பல் பரவியதுடன், லாவா குழம்பும் வெளியேறியது.

இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 1.35 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Also Read  காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை: இந்திய ராணுவம் உதவி

கடந்த ஆண்டை விட, இம்முறை அதன் வெடிப்பு கடுமையாக இருக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?

Lekha Shree

இன்று உலக புற்றுநோய் தினம்!

Tamil Mint

Jeff Bezos உடன் விண்வெளிக்கு செல்லும் 18 வயது இளைஞர்…!

Lekha Shree

ஒன்றரை ஆண்டுகள் கழித்து தாயைப் பார்த்த மகள்! – கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ!

Tamil Mint

வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை – மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலியான பரிதாபம்

sathya suganthi

அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

Tamil Mint

சீனாவில் பிபிசிக்கு தடை – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்!

Tamil Mint

1500 முகக்கவசங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருமண உடை…! அசத்திய டிசைனர்…!

Lekha Shree

பதிப்பாளர் கொலை வழக்கு: 8 பேருக்கு மரண தண்டனை!

Tamil Mint

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை…! எல்லாம் பொய்யா…! வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்…!

sathya suganthi

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போடாவிடில் சிறை – எங்கு இந்த உத்தரவு தெரியுமா?

sathya suganthi