விஸ்மயா விவகார எதிரொலி : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போட்ட அதிரடி உத்தரவு


கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி, வரதட்சணைக் கொடுமை அனுபவித்து வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

மேலும் கேரளாவில் கடந்த வாரத்தில் மட்டும் வரதட்சணை கொடுமை காரணமாக 3 இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

வரதட்சணை கொடுமை மட்டுமின்றி பெண்களிடம் அத்துமீறல், சிறுமிகளிடம் தகாத முறையில் நடத்தல் போன்ற குற்றங்கள் அதிக அளவு நடந்து வரும் நிலையில், போலீசாருக்கு இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதை அடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு மையம் ஒன்றை கேரள அரசு தொடங்கியுள்ளது.

மேலும் இந்த மையத்தில் வாட்ஸ்-அப் மூலமும், தொலைபேசி மூலமும் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

Also Read  கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி…!

இந்த மையம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே கேரளா முழுவதிலும் இருந்து 100 க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Also Read  கேரளா அருகே கடலுக்கடியில் தீவு? வியப்பூட்டும் தகவல்கள்…!

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் மேலும் இக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளது என்றும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Also Read  கேரளாவில் 14 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு...!

இதன்மூலம் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் இதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நம்புகிறேன் என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவில் 14 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு…!

sathya suganthi

“காற்றிலும் பற்றாக்குறை…மோடியே பதவி விலகுங்கள்…” – அருந்ததி ராய் காட்டம்

sathya suganthi

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்: ஒரேநாளில் தன்னால் மறையும் OTP!

Lekha Shree

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

Lekha Shree

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டில் பாகப் பிரிவினை…! யார் யாருக்கு என்ன சொத்து…!

sathya suganthi

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

போலி கோழிமுட்டை விற்பனை… அதிர்ச்சி அடைந்த மக்கள்..! ஆந்திராவில் பரபரப்பு..!

Lekha Shree

பாக் மீது இந்தியா பகீர் குற்றச்சாட்டு

Tamil Mint

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்…! விவசாயி கொடுத்த வினோதப் புகார்…!

sathya suganthi

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!

Devaraj