நாட்டில் ஏற்படும் வளர்ச்சியின் பலன், எவ்வித பாகுபாடு பார்க்காமல் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும்: பிரதமர் மோடி


இன்று பிரதமர் மோடி, அலிகார்க் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், “பன்முகத்தன்மையின் பலத்தை மறக்கக்கூடாது. அதனை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது” என தெரிவித்தார். மேலும் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நினைவு தபால் தலையையும் மோடி வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், “நாட்டில் ஏற்படும் வளர்ச்சியின் பலன்கள், எவ்வித பாகுபாடு பார்க்காமல் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பாதையில் தேசம் செல்கிறது. அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி தேசம் சென்று கொண்டுள்ளது. எந்த மத பாகுபாடும் காட்டாமல், அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகள் கிடைக்கவும், அதன் மூலம் அவர்களின் கனவுகள் நிறைவேற வேண்டும் என்ற பாதையில் தேசம் பயணிக்கிறது.

அலிகார்க் முஸ்லிம் பல்கலை.,யானது ஒரு நகரத்தை போல் இருக்கும் என என்னிடம் பலர் கூறியுள்ளனர். இங்குள்ள துறைகள், விடுதிகள், ஆயிரகணக்கான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை பார்க்கும் போது, மினி இந்தியாவை போல் உள்ளது. இப்பல்கலை மாணவர்கள், உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும், இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றனர்.  

Also Read  மாயமாகும் கொரோனா நோயாளிகள்…! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

இங்கு பார்க்கும் பன்முகத்தன்மையானது, இப்பல்கலைகழகத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நாட்டிற்கும் பலமாக உள்ளது. இந்த பன்முகத்தன்மையின் பலத்தை மறக்கக்கூடாது. பலவீனப்படுத்த முடியாது. தேசம் வளர்ச்சி பெறவும், அதற்கான பணிகளில் ஈடுபடவும் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு கட்ட தோண்டிய குழியில் ‘தங்கப்புதையல்’! வேடிக்கை பார்த்தவர் செய்த செயலால் பரபரப்பு!

Lekha Shree

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj

பேட்டிங்கில் இங்கிலாந்து அணிக்கு தண்ணி காட்டிய முகம்மது ஷமி, பும்ரா: அடேங்கப்பா.. அட்டகாச ஆட்டம்.!

mani maran

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

டேக்சி ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பெண் மீது வழக்குப் பதிவு..!

Lekha Shree

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவீட் – பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது!

Tamil Mint

பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Lekha Shree