மத்திய அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள்…!


நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஏற்கனவே கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல் என ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்தது.

நேற்று பதவியேற்ற ஏழு பெண் அமைச்சர்களும், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அவர்களில், அன்னப்பூர்ணா தேவி, பாரதி பிரவீன் பவார், பிரதிமா பவுமிக் ஆகியோர், முதல் முறை எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில், ஒன்பது பெண் அமைச்சர்கள் இருந்தனர். இதில் ஆறு பேர் கேபினட் அமைச்சர்கள்.

Also Read  விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்... இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…?

sathya suganthi

கணவன் மனைவி ஈகோவை காரணியாக கருதி வெளியே விட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

Shanmugapriya

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – தேர்தல் நேர யுக்தியா…?

Devaraj

“மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே” மோடிக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி…!

sathya suganthi

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…!

Lekha Shree

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகள் தடை

Tamil Mint

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் பிழை – கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.22 லட்சம் பரிசு…!

sathya suganthi

மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு

Tamil Mint