சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக செயலாளர் மீது வழக்குப்பதிவு..!


நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ தாக்கினாலோ அந்த இளைஞருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

Also Read  பிரபல யூடியூப் சமையல் கலைஞர் 'டாடி' ஆறுமுகம் மகன் கைது..! காரணம் இதுதான்..!

ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

Also Read  'வேதாளம்' தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி?

இதனிடையே ‘ஜெய்பீம்’ படம் குறித்த சர்ச்சையால் மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படத்தை பாமகவினர் நிறுத்தினர்.

அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read  கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் - அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

இந்நிலையில், அவ்வாறு பேசிய மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” – ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

Lekha Shree

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan

பெண் காவலர்களுக்கான ஸ்பெஷல் உத்தரவு – டிஜிபி திரிபாதி அதிரடி…!

sathya suganthi

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர் படத்தின் படப்பிடிப்பு!

Lekha Shree

‘பிச்சைக்காரன் 2’ – வெளியானது ‘மாஸ்’ டைட்டில் லுக்… படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Lekha Shree

சொத்துக் குவிப்பு வழக்கும்.. பாஜக இணைப்பும்.. பரபரப்பை ஏற்படுத்தும் ராஜேந்திர பாலாஜியின் டெல்லி பயணம்.!

suma lekha

தந்தையைப் போலவே மகனுக்கும் ஏற்பட்ட திடீர் மரணம்…! சோகத்தில் கன்னட திரையுலகம்..!

Lekha Shree

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“மாமனிதன்” – பேரக்குழந்தைகளுடன் இளைராஜா இசையமைக்கும் வீடியோ…! வாழ்த்து சொன்ன யுவன்…!

sathya suganthi

ஓடிடியில் வெளியாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?

Lekha Shree

மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

Tamil Mint