அதிமுக-பாமக கூட்டணி முறிவு..! – ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி!


தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கட்சி நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Also Read  "தமிழக முதல்வரின் நற்பெயரை கெடுக்கவே ஓபிஎஸ் தவறான தகவல்களை கூறுகிறார்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்!

அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்பதை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து 15 மற்றும் 16ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும்.

Also Read  "அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்படும்" - தமிழக நிதியமைச்சர்

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கூறுகையில், “கடந்த தேர்தல்களில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவுக்கு ஆளுமைமிக்க தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

Also Read  பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

சொந்தக்கட்சிக்காரர்கள் கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைத்தால் வெற்றி பெறமுடியும? அதிமுகவோடு கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய இடம் கிடைக்காது. பாமகவால் கூட்டணி கட்சிகள் பலன் அடைந்தது. கூட்டணி கட்சியால் பாமகவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஆகவே, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம்” என கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பாமகவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

sathya suganthi

கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு

Tamil Mint

ரூ.2 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்கா பறிமுதல்

VIGNESH PERUMAL

கல்லூரி விடுதிகளுக்கு யுஜிசி புதிய நிபந்தனை

Tamil Mint

டவ்-தே புயல் – 7 மாவட்டங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

sathya suganthi

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

ஜெயலலிதா பல்கலைக்கழக சர்ச்சை: ஓபிஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..!

suma lekha

விஜயதசமியன்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை

Tamil Mint

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..!

Tamil Mint

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree