மின்னல் தாக்கி பலர் உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!


இந்தியாவின் வடமாநிலங்களில் மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்கிறது.

அதுபோலவே வடமாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் பிரயாகராஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மின்னலுடன் மழை கொட்டியது.

இதில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்து உள்ளனர். அதுபோலவே கான்பூர், பதேபூர், பிரோசாபாத், உன்னாவ், ஹமீர்பூர், சோன்பத்ரா, மிர்சாபூர் என பல இடங்களிலும் பலத்த மின்னலுடன் மழை பெய்தது. மேலும், மின்னல் தாக்கி அதன் காரணமாக 41 பேர் இறந்துள்ளனர்.

Also Read  திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

இதுபோல மத்திய பிரதேசத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 7 சிறுவர்கள் உட்பட 20 பேர் பலியாகினர். 21 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களில் 11 பேர் சுற்றுலா பயணிகள். ஜெய்ப்பூரில் அம்பர் கோட்டை அருகே மலைப் பகுதியில் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

Also Read  மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அப்போது சிறுவர்கள் உள்பட பலர் செல்பி எடுத்த போது மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

Also Read  ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! - மத்திய அரசு அதிரடி

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை அறிந்து துயருற்றேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் கருணை தொகையாக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

போலி கோழிமுட்டை விற்பனை… அதிர்ச்சி அடைந்த மக்கள்..! ஆந்திராவில் பரபரப்பு..!

Lekha Shree

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல் பதிவு

sathya suganthi

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

டெல்லி விவசாயிகள் போராட்டம்: நட்சத்திரங்களின் ட்விட்டர் மோதல்! ரிஹானா முதல் சித்தார்த் வரை நடந்தது என்ன?

Tamil Mint