என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி


மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், “இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்யும், அவர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்கிற வாய்ப்பைத் தரும், இடைத்தரகர்களை அகற்றும்” என மத்திய அரசு கூறியது. 

எனினும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை முடிப்பதாக இல்லை. அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பிப்பெறும்  வரை இந்த போராட்டம் தொடரும் என உறுதியாக கூறுகின்றனர் விவசாயிகள்.

இந்த நிலையில், டெல்லியில் பிக்கி என்று அழைக்கப்படுகிற இந்திய வர்த்தக, தொழில்சபைகள் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில் வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். 

Also Read  காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 சரக்கு பாட்டில் மாயம் – எலியை கோர்த்து விட்ட உ.பி. போலீசார்…!

“இந்தியாவில் விவசாய துறையில் ஈடுபடும் மக்களின் வருமானத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. தற்போது விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைகளில் மட்டுமல்லாது அதற்கு வெளியே உள்ளவர்களிடமும் விற்க வாய்ப்புகள் வந்துவிட்டன.

மத்திய அரசு தனது கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மூலம் என்ன விலை கொடுத்தாவது விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உறுதி கொண்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகள் அதிக சந்தைகளை அணுகுகிற வாய்ப்பையும், அதிக முதலீடுகளையும், தொழில்நுட்பத்தின் நன்மைகளையும் பெற்றுக்கொள்கிற வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன. 

Also Read  ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

இந்தியாவில் விவசாய துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு போதாது. துரதிர்ஷ்டவசமாக இந்திய நிறுவனங்கள் போதுமான முதலீடுகளை விவசாய துறையில் செய்யவில்லை. 

தனியார் துறையினர் விவசாய துறையில் கூடுதல் முதலீடுகளை செய்து விவசாயிகளுக்கு ஆதரவு கிடைக்கிறபோது, அவர்களின் உற்பத்தி பொருட்கள் சிறப்பாக இருக்கும். 

Also Read  கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

இந்தியாவில் கடந்த காலத்தில் வரி பயங்கரவாதமும், ஆய்வாளர் ராஜ்யமும் இருந்தது. தற்போது முகமற்ற வரி மதிப்பீட்டு முறையை (இணையதள முறை) நடைமுறைப்படுத்தி உள்ள சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது” என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு தேடி வரும் மது…! ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி…!

sathya suganthi

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த நிறுவனம்…! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!

Devaraj

உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதி…!

Lekha Shree

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் – ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

sathya suganthi

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு ரோஜாப்பூ! – வினோத விழிப்புணர்வு

Shanmugapriya

சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு கோடாாியால் வெட்டு – பதைபதைக்க வைக்கும் காட்சி

Tamil Mint

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…?

sathya suganthi

வரலாற்றில் முதல்முறை… உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் ஒன்றாக பதவியேற்பு…!

Lekha Shree

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

Shanmugapriya

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint