திடீரென ரத்தான பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம்…! நடந்தது என்ன?


பாதுகாப்பு குறைபாடு காரணமாக திடீரென பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மோசமான வானிலை நிலவியதால் பஞ்சாப் மாநிலத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரை விடுத்து சாலை மார்க்கமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி.

அப்போது போராட்டக்காரர்கள் மறுக்கப்பட்டது சாலையை மறித்துள்ளனர். இதனால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இன்று நடக்கவிருந்த நிகழ்ச்சியில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.

Also Read  ஜூலை 31ம் தேதிக்குள் 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

ஆனால், பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்படுவதாக விழா மேடையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி ரத்தானது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், “பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இன்று பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read  மத வேறுபாட்டை தூண்டும் போலி முகநூல் செய்தி… வைரலாகும் உண்மை புகைப்படம்!

மோசமான வானிலை நிலவுவதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக சென்றார் பிரதமர் மோடி.

சாலை மார்க்கமாக சென்று பிரதமரின் வாகனம் மறிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் சாலையை மறித்திருந்தனர். இதனால் பிரதமரின் கான்வாய் வாகனங்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தன.

Also Read  அதிகரிக்கும் கொரோனா… தினசரி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

பிரதமரின் வருகை திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராமர் கோயில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உ.பி. அரசு

Tamil Mint

அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்ட மாநிலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா…?

Devaraj

பாக் மீது இந்தியா பகீர் குற்றச்சாட்டு

Tamil Mint

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

Lekha Shree

வெறும் வயிற்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? – முழு விவரம் இதோ…!

sathya suganthi

“கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது” – தேசிய பசு ஆணையம்

Shanmugapriya

‘பெகாசஸ்’ விவகாரம்: தமிழில் முழக்கமிட்ட பஞ்சாப் எம்.பி… அதிர்ந்த நாடாளுமன்றம்..!

Lekha Shree

“இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை” – உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு…!

Devaraj

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

அரசு உயர் அதிகாரி மீது மண்ணை எறிந்த பெண் அதிகாரி… அலுவல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார்..!

Lekha Shree

‘குடிகார குரங்கு’ – மதுகுடிக்கும் குரங்கின் வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நாடு முழுவதும் 18ம் தேதி மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு…! காரணம் இதுதான்…!

sathya suganthi