a

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற மருத்துவர் உள்பட 2 பேர் கைது…!


சென்னை மேடவாக்கத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் கொரோனா தடுப்பு மருந்தை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் தடுப்பூசியை மருத்துவர்கள் அதிகளவில் பரிந்துரைத்து வரும் நிலையில், அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் மட்டும் விற்கப்படுகிறது. இந்த மருந்து மருந்தகங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கிடைப்பதில்லை.

Also Read  "வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!" - மத்திய அரசு

இந்த மருந்தை வாங்குவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மருத்துவர்கள் பரிந்துரை கடிதத்துடன் நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை யெடுத்து வருவதால், 2 நாட்கள் வரை காத்திருந்தால்தான் மருந்து கிடைக்கும் நிலை உள்ளது. ஒருவருக்கு 6 குப்பி மருந்து என்ற வீதம் விற்கப்படும் நிலையில்,அதன் மொத்த விலை 9,360 ரூபாய் ஆகும்.

ஆனால் இதை சிலர் கள்ளச்சந்தையில் வாங்கி ரூ.20 ஆயிரத்துக்கு மேல் விற்பதாக புகார்கள் பதிவாகி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன், தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மருந்து எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பு - மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யாரை கலாய்த்தார் நடிகை கஸ்தூரி?

Tamil Mint

பிறந்தநாள்: செல்பி வெளியிட்ட விஜயகாந்த், வாழ்த்து தெரிவித்த முதல்வர்

Tamil Mint

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்புமனு தாக்கல் செய்த பாஜக மாநில துணைத்தலைவர்..!

Lekha Shree

ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு:

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ட்வீட் செய்த சென்னை மாநகராட்சி!

HariHara Suthan

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரானா

Tamil Mint

சாத்தான்குளம் கொலை வழக்கில்-திருப்திகரமாக உள்ளது என நீதிபதிகள் கருத்து.

Tamil Mint

பாஜகவினர் தாக்குதல் நடத்திய கடையில் கமல்…! காலணி வாங்கி ஆதரவு…!

Devaraj

குற்றாலத்தில் குளிப்பதற்கு மீண்டும் தடை!!

Tamil Mint

ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி

Tamil Mint