ஆட்டை பலி கொடுத்த ரசிகர்களால் ரஜினிக்கு வந்த சிக்கல்..!


’அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் விவகாரத்தில் ரசிகர்களை கண்டிக்காத நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆம் தேதியன்று நடிகர் ரஜினி நடிப்பில் உருவான ’அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை கொண்டாடும் விதமாக ரஜினி கட் அவுட்டிற்கு அவரது ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

Also Read  செம்ம… சிறுத்தை சிவாவுடன் இணையும் சிங்கம் சூர்யா…

இந்நிலையில், அண்ணாத்த திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியீட்டின் போது ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள் மீதும், அதை கண்டிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது

Rajinikanth's Annaatthe motion poster out:- Cinema express

இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Also Read  தீபாவளிக்கு வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த…! வெளியான மாஸ் அப்டேட்!

இந்த புகாரில் ரஜினி ரசிகர்களின் செயல் ஆயுத கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்த செயலிற்கு நடிகர் ரஜினி தரப்பில் எந்த வித கண்டன அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவல்துறையினர் அபிஷேகம் செய்த நபர்கள் மீதும், ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.

Also Read  "டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது" - ராஷ்மிகா மந்தனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை…

HariHara Suthan

ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

sathya suganthi

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு Common Dp வெளியிட்ட தயாரிப்பாளர்…!

Lekha Shree

7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! – தீயாய் பரவும் தகவல்

Shanmugapriya

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

‘Bigboss’ பிரபலம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. சிம்பு வெளியிட்ட டைட்டில் லூக்!

HariHara Suthan

வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது – மறுபரிசீலனை செய்ய முடிவு!

Lekha Shree

செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree

சத்தமின்றி 4 நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்…!

Lekha Shree

‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா…!

Lekha Shree

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi