‘ஜெய் பீம்’ விவகாரம் – சூர்யா, ஜோதிகா மீது பா.ம.க., போலீசில் புகார்..!


நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர் பாமகவினர்.

சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பாமக மாநில நிர்வாகிகள் சென்னை அண்ணாநகர் உதவி கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர.

அதில், “ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வன்னியர் சமூகத்தினரின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன.

Also Read  'மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்’ - நித்யானந்தா அதிரடி அறிவிப்பு!

ஜாதி வெறியைத் தூண்டும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

ஜெய்பீம் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி பாமகவினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பாமக மாநில துணைப்பொதுச் செயலாளர் கே.என். சேகர் புகார் மனு அளித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் அளித்த பேட்டியில், “சூர்யா, ஞானவேல், ரஞ்சித், கண்ணன் இவர்கள் யார்? எங்களது சமுதாயத்தை இழிவாக காட்டுவதற்கு இவர்களுக்கு உரிமை கொடுத்தது யார்?

Also Read  வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! - வைரலாகும் வீடியோ

சூர்யா வீட்டிற்கு 5 காவலர்கள் நிறுத்தினால் அமைதி வந்துவிடுமா? சிவகுமார் குடும்பத்தில் இருந்து அடுத்த படம் வராதா? தமிழகத்தில் நிலையான ஆட்சி வேண்டுமென்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு அமைதியாக வேண்டும் என நினைத்தால் சூர்யா வருத்தம் தெரிவிக்க வேண்டும். வருத்தம் தெரிவித்த ஒரு மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாய் நான் மணியாடர் செய்கிறேன்” என கூறினார்.

Also Read  விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில்!

அதேபோல் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் நேற்று திருச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் படமெடுத்து உள்ள ஜெய்பீம் இயக்குனர், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!

sathya suganthi

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே வந்தால் அபராதம் – எச்சரித்த ககன் தீப் சிங்!

Lekha Shree

ஒரு முன்னாள் கொரோனா நோயாளியின் வாக்குமூலம்: உயிர் மீது ஆசை இருந்தால் இதை படிக்கவும்

Tamil Mint

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

“விஷாலுக்கு பயந்து ஓடிய நடிகை யார்?” – காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

Lekha Shree

சிம்புவின் ‘மாநாடு’ முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக 90 வயது நெல்லை மூதாட்டி பதவியேற்பு..!

Lekha Shree

வேளாண் பட்ஜெட் 2021 – பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!

Lekha Shree

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’ பட நடிகை..! வெளியான ‘செம’ அப்டேட்..!

Lekha Shree

திருடு போன துப்புரவு வாகனங்கள் – தேடும் துாய்மை பணியாளர்கள்!

Lekha Shree

100 மில்லியன் பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்! – வேற லெவலில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya