a

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!


சென்னை எழும்பூர் காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு தொடர்புக்கொண்ட நபர், சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன் என்றும் அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் கூறிவிட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்குச் சென்று, சோதனை நடத்தினர். எனினும், வீட்டிலிருந்து எந்த வெடிபொருளும் சிக்காத நிலையில், அது வதந்தி என்பது தெரியவந்தது.

Also Read  விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் மிரட்டல் விடுத்தவர் யார் என்ற கண்டறிந்த போது, அது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. இவர் சற்று மனநலம் பாதித்தவர் எனக் கூறப்படுகிறது.

இவர் மீது ஏற்கெனவே தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்குகள் உள்ளன.

Also Read  தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு 100க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் நினைவில் உள்ளன என்றும் தொலைபேசி கிடைத்தால் யாரோ ஒருவருக்கு இதுபோன்று மிரட்டல் விடுக்கிறார் என்றும் விழுப்புரம் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடுமாறு விழுப்புரம் ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் ஆட்சியரின் உத்தரவுக்குப் பின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

Also Read  சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் – தமிழக அரசு

Tamil Mint

பிங்க் ரீமேக் படத்தின் மகளிர் தின போஸ்டர் வெளியீடு! அசத்தும் பவன் கல்யாண்!

HariHara Suthan

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

நடிகை காஜல் அகர்வாலின் ‘Anu and Arjun’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Lekha Shree

Not a Common Man! விஷால் 31 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு…

HariHara Suthan

சிவ சங்கர் பாபாவை தேடி டேராடூன் வரை வலை விரித்த தமிழக தனிப்படை…!

sathya suganthi

ஆன்லைனில் பொதுத்தேர்வுகள்? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

விஜய்யுடன் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ்? அப்ப இன்னொரு ’மாஸ்டர்’ பீஸ் ரெடி!

Tamil Mint

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் “நீட்” பயிற்சி…!

Devaraj

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு

Tamil Mint

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree