கேரள அழகிகள் உயிரிழந்த விவகாரம் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!


கேரள மாடல் அழகிகள் 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர். அதே அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் அஞ்சனா சாஜன். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாவர்.

கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி நள்ளிரவு அன்சி கபீர், அஞ்சனா சாஜன் மற்றும் அவர்களது நண்பர் முகமது ஆசிப் ஆகியோர் பாலாரி வட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் கேரள அழகிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிரைவர் அப்துல் ரகுமான் மற்றும் முகமது ஆசிப் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Also Read  கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆனால், சிகிச்சை பெற்று வந்த முகமது ஆசிக் கடந்த 7ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிரைவர் அப்துல் ரகுமானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் அக்டோபர் 31ஆம் தேதி கேரள அழகிகள் இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.

Also Read  மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

இதனையடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் ராய் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரள அழகிகளை சைஜு ஆடி காரில் பின் தொடர்ந்து சென்றது தெரியவந்துள்ளது.

ஓட்டலில் நடந்த பார்ட்டியில் கேரள அழகிகளை ஓட்டல் உரிமையாளர் ஜோசப் அங்கேயே தங்குமாறு கூறியுள்ளார். இதை மறுத்ததால் அங்கே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Also Read  சூரத்: விஷவாயு தாக்கி 6 பேர் பலி…! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி…!

இதனால் கேரள அழகிகள் அங்கிருந்து காரில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது அவர்களை ஆடி காரில் சைஜு பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

தங்களை பின்தொடர்வதை அறிந்த அழகிகள் காரை வேகமாக இயக்க கூறியுள்ளனர். அப்படி காரை விரைவாக இயக்கியபோது ஒரு இடத்தில் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை அடுத்து ராய் ஜோசப் மற்றும் சைஜு ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj

ஐரோப்ப நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த மத்திய அரசு…என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

1,585 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

புதிய உச்சம் தொட்ட கொரோனா பலி…! ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழப்பு…!

sathya suganthi

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!

mani maran

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு… காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்..!

suma lekha

முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம் – மமதா பானெர்ஜீ

Tamil Mint

திரைப்படமாகிறது பிசிசிஐ தலைவர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு… யார் ஹீரோ தெரியுமா?

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

sathya suganthi

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியறிந்த 3 ரசிகர்கள் மாரடைப்பால் மரணம்..!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021

sathya suganthi