பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி – அரசியல் பிரமுகர்கள் மரியாதை..!


தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை..!

இதில் பங்கேற்க பசும்பொன் செல்லும் வழியில் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதை தொடர்ந்து மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Also Read  முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் தொழிலதிபர் பணமோசடி புகார்…!

அதையடுத்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக நேற்றைய தினம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலை சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read  கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை…!

sathya suganthi

சசிகலாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு – டிடிவி எடுக்கும் முக்கிய முடிவு!

Lekha Shree

எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்!

suma lekha

“பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இணைக்கப்படும்” – அமைச்சர் சக்கரபாணி

Lekha Shree

வங்கக்கடலில் உருவாகும் புயல்… தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!

Lekha Shree

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

`தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்’… சீமான் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி?

Lekha Shree

உறுதியானது அதிமுக – பாமக கூட்டணி! – பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

Shanmugapriya

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Tamil Mint

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

வாக்காளர் அட்டை இல்லையா? இந்த ஆணவங்களை வைத்தும் ஓட்டு போடலாம்…!

Devaraj