a

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி 75 தொகுதிகைளையும் கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவைக்கு நுழையப் போகும் வாரிசுகளின் யார் யார் என்பதை பார்ப்போம்…!

மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுப்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். இது அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், திரிணமூல் என அனைத்துக்கட்சிகளுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் 22 வாரிசுகள் போட்டியிட்ட நிலையில், அதில் 19 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவரும் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அது போல் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் மகன் ஆவார்.

Also Read  வெறும் 261 வாக்குகள் தான் வித்தியாசம்.. கரூரில் டஃப் கொடுக்கும் செந்தில்பாலாஜி..

வில்லிவாக்கம் பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஐ.பி. செந்தில்குமார், ஐ.பெரியசாமியின் மகன்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மகேஷ் பொய்யாமொழி, பொய்யாமொழியின் மகன் ஆவார்.

மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பேரனான வெற்றியழகன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

அது போல் தூத்துக்குடியில் போட்டியிட்டு வென்ற, கீதா ஜீவன், பெரியசாமியின் மகளாவார்.

தங்கப் பாண்டியனின் மகனும் திமுக எம்பி தமிழச்சி பாண்டியனின் சகோதரருமான தங்கம் தென்னரசு, திருச்சுழியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் டிஆர்பி ராஜா, திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனாவார்.

மதுரை மத்தியில் போட்டியிட்டு வென்றவர் பிடிஆர்பி ராஜன். இவர் பிடிஆர் பழனிவேல் ராஜாவின் மகனாவார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஜெ.அன்பழகனின் மகன் ஜெ.கருணாநிதி, திநகரில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

Also Read  தமிழக பாஜக-வில் இதுவரை இடம் பிடித்துள்ள நடிகர், நடிகைகளின் பட்டியல்:

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கே.பி.பி.சங்கர், கே பி பி சாமியின் தம்பி

திமுக சார்பில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சிவசங்கர் , சிவசுப்பிரமணியத்தின் மகனாவார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கா.சொ. கண்ணன், இவர் கா.சொ. கண்ணனின் மகனாவார்.

கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிஎஸ்டி சரவணன், திருவேங்கிடத்தின் மகனாவார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் எழிலன். இவர் மாநில திட்டகமிஷனின் முன்னாள் துணை தலைவர் நாகநாதனின் மகனாவார்.

திருவாரூர் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் சபா ராஜேந்திரன், சபாபதியின் மகனாவார்.

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பூண்டி கலைவாணன். இவர் பூண்டி கலைச்செல்வனின் தம்பியாவார்.

காஞ்சிபுரத்தில் எழிலரசன் போட்டியிட்டு வென்றார். இவர் காஞ்சி அண்ணாமலையின் பேரனாவார்.

Also Read  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

ராமநாதபுரத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் காதர் பாஷா முத்து ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ காதர் பாஷாவின் மகனாவார்.

காங்கிரஸ் சார்பில் 4 வாரிசுகள் போட்டியிட்டுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற திருமுகன் ஈவெரா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனாவார்.

அறந்தாங்கியில் போட்டியிட்டு வென்றவர் தி. ராமச்சந்திரன், திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசரின் மகனாவார்.

திருவாடாணை தொகுதியில் கரு மாணிக்கம் வென்றார். இவர் காங்கிரஸின் கே.ஆர்.ராமசாமியின் மகன்.

கன்னியாகுமரி எம்பி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் விஜய் வசந்த், மறைந்த எம்பி எச் வசந்தகுமாரின் மகனாவார்.

அதிமுக சார்பில் ஆலங்குளம் சார்பில் போட்டியிட்டு வென்ற மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியனின் மகனாவார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணங்கள் உயர்வு, மக்கள் அதிர்ச்சி

Tamil Mint

“ஐடி ரெய்டு மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக அச்சுறுத்தப்பார்க்கிறது” – கனிமொழி

Shanmugapriya

அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் அமமுக? சசிகலாவுக்கு உதவ முயலும் டிடிவி! ஏற்றுக்கொள்வாரா சசிகலா?

Tamil Mint

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு; பாதி கிணறு தாண்டிய பாமக

Bhuvaneshwari Velmurugan

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint

திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி-தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tamil Mint

அமைதியை கெடுப்போர் மீது நடவடிக்கை – காவல் ஆணையர் எச்சரிக்கை

Tamil Mint

“அகில இந்திய கட்சி, இங்க வந்து அடிமைத்தனமா பிச்சை எடுக்கிறது கஷ்டமா இருக்கு” – சுப்ரமணியன் சுவாமி

Shanmugapriya

பேரறிவாளனுக்கு பரோல்

Tamil Mint

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம் ஜி ஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டிய முதல்வர்

Tamil Mint

உளவுத் துறையின் தீவிர கண்காணிப்பில் ஓபிஎஸ் மகன்

Tamil Mint